தினகரன் தொடங்கப்போகும் கட்சிக்கு அமைச்சர் ஜெயக்குமார் பரிந்துரைக்கும் பெயரை பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மர்.15-ல் புதிய கட்சியை அறிவிக்கிறார் தினகரன்

  சென்னை: டிடிவி தினகரன் துவங்க உள்ள கட்சிக்கு இப்படி ஒரு பெயரை சூட்டலாம் என ஐடியா கொடுத்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

  ஆர்.கே.நகர் எம்எல்ஏ, டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டபடி அவருக்கு குக்கர் சின்னம் வழங்கும்படி டெல்லி ஹைகோர்ட் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் புதிய கட்சி பெயரை வரும் 15ம் தேதி அறிவிக்க உள்ளதாக ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

  இந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டியில் தினகரன் கட்சி துவங்குவது பற்றியும், ராகுல் காந்தியின், ராஜிவ்காந்தி கொலையாளிகள் குறித்த கருத்து பற்றியும் பேசினார்.

  சும்மா இருந்த ராகுல்

  சும்மா இருந்த ராகுல்

  ஜெயக்குமார் கூறியதாவது: ராஜீவ் கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல்காந்தி இப்போது, கூறுவது அரசியலுக்காக மட்டுமே. இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது ராகுல் காந்தி சும்மாதானே இருந்தார்.

  தில்லு முல்லு முன்னேற்ற கழகம்

  தில்லு முல்லு முன்னேற்ற கழகம்

  தினகரன் தொடங்கும் கட்சிக்கு தில்லு, முல்லு முன்னேற்ற கழகம் என்றுதான் பெயர் சூட்ட வேண்டும். அதுதான் பொருத்தமாக இருக்கும். காவிரி விவகாரத்தில் தொடர்ந்து போராடிவருவது அதிமுகதான். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுபவர்கள் நாங்கள் அல்ல.

  மலையேறிய சாமி

  மலையேறிய சாமி

  ஆன்மீக அரசியல் செய்வதாக கூறினார்கள். ஆனால் இப்போது, ஆன்மீக சாமி மலையேறப்போய்விட்டார். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார். இதனிடையே ராகுல் காந்தி கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வருகிறது.

  எதிர்ப்பு குரல்கள்

  எதிர்ப்பு குரல்கள்

  பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், ராகுல் காந்தி ராஜீவ் கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக இப்போது கூறியுள்ளது அரசியல் தேவைக்காகத்தான். ராகுல் காந்தி இதை இலங்கையில் போர் நடந்தபோதே கூறியிருந்தால் அப்பாவி தமிழர்கள் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள் என்றார் அவர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Minister Jayakumar suggest a name for TTV Dhinakaran's new political party, which he going to launch on March 15.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற