For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. மரண விவகாரம்: ஆறுமுகசாமி கமிஷனில் போயஸ்கார்டன் சமையலர் ராஜம்மாள் ஆஜர்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனில் ஜெயலலிதாவின் சமையல்காரர் ராஜம்மாள் ஆஜராகி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெ.கைரேகை சர்ச்சை...ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன் டாக்டர் பாலாஜி விளக்கம்- வீடியோ

    சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனில் ஜெயலலிதாவின் சமையல்காரர் ராஜம்மாள் ஆஜராகி உள்ளார்.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விசாணை கமிஷன் பலரிடமும் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்தவர்கள், அவருடன் தொடர்புடையவர்கள், சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்கள் என பலருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது.

    Jayalalitha's house cook Rajamal will appear in the Arumugasamy commission today

    இந்நிலையில் ஜெயலலிதா வீட்டில் பணிபுரிந்தோரிடம் விசாரணை நடந்து வருகிறது. போயஸ் கார்டனில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, சமையலராக இருந்த ராஜம்மாள், இன்று விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.

    இவர் நீண்ட காலமாக போயஸ்கார்டனில் சமையலராக இருப்பதால் வீட்டிற்குள் நடந்த விவகாரங்கள் அனைத்தும் அவருக்கு தெரியும் என கூறப்படுகிறது.

    Jayalalitha's house cook Rajamal will appear in the Arumugasamy commission today

    எனவே, விசாரணை கமிஷனில், இன்று அவர் தெரிவிக்க உள்ள தகவல்கள் விசாரணையில் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மறைந்த பிறகும், அவரது போயஸ் கார்டன் இல்லத்திலேயே, ராஜம்மாள் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Jayalalitha's house cook Rajamall will appear in the Arumugasamy commission today. Arumugasamy commision inquires about Jayalalitha's dead.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X