ஜெ.வின் ஆன்மா சசி குடும்பத்தை சும்மா விடாது, கொன்றுவிடும்... பீதி கிளப்பும் செம்மலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: ஜெயலலிதாவின் ஆன்மா சசிகலா குடும்பத்தை கொன்றுவிடும் என செம்மலை கூறியுள்ளார். ஜெயலலிதாவின் ஆன்மா சசிகலா குடும்பத்தினரை சுத்தி சுத்தி அடிக்கிறது என்றும் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏவான செம்மலை கூறியுள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்குப்பிறகு அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் சசிகலா குடும்பத்தினரால் அவர் தாக்கப்பட்டதாலேயே ஜெயலலிதாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

ஜெ.வால் நீக்கப்பட்டவர்கள்...

ஜெ.வால் நீக்கப்பட்டவர்கள்...

ஜெயலலிதாவின் மரணத்திற்குபிறகு கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற சசிகலா குடும்பம் படுவேகம் காட்டியது. ஜெ. உயிரோடு இருந்த போது அவரால் நீக்கப்பட்டவர்கள் எல்லாம் அவரது மறைவுக்குப்பிறகு போயஸ் இல்லத்தில் கோலொச்ச தொடங்கினர்.

தொடர் சரிவை சந்திக்கும் அதிமுக

தொடர் சரிவை சந்திக்கும் அதிமுக

அதிமுக பொதுச்செயலாளராக தன்னை நியமித்துக் கொண்ட சசிகலா முதல்வராக பதவியேற்க முயன்றார். அப்போது சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் சசிகலாவின் முதல்வர் நினைப்பு கனவாகவே போனது.சசிகலா சிறையிலடைக்கப்பட்டதால், அதிமுக தினகரனின் கட்டுப்பாட்டில் சென்றது. சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் சென்ற நாள் முதல் அதிமுக தொடர் சரிவுகளையும் பல சிக்கல்களையும் திருப்பங்களையும் சந்தித்து வருகிறது.
ஜெ. ஆன்மா சும்மாவிடாது

இந்நிலையில் நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏவான செம்மலை கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் ஜெயலலிதாவின் ஆன்மா சசிகலா குடும்பத்தினரை சும்மா விடாது என்றார்.

ஜெ.ஆன்மா சசி குடும்பத்தை கொன்றுவிடும்

ஜெ.ஆன்மா சசி குடும்பத்தை கொன்றுவிடும்

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த சசிகலா குடும்பத்தை அவரது ஆன்மா கொன்று விடும் என்றும் அவர் கூறினார். சசிகலா குடும்பத்தை ஜெயலலிதாவின் ஆன்மா சுத்தி சுத்தி அடிக்கிறது என்றும் செம்மலை தெரிவித்தார்.

ஓபிஎஸ் விரைவில் முதல்வராவார்

ஓபிஎஸ் விரைவில் முதல்வராவார்

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும் என்பதை போல ஜெயலலிதாவின் ஆன்மா சசிகலா குடும்பத்தை பழிவாங்கும் என்றும் செம்மலை கூறினார். விரைவில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
OPS support MLA Semmalai says in a function that Jayalalitha soul will kill sasikala family. Jayalalitha 's soul will never leave Sasikala family he said.
Please Wait while comments are loading...