முதல்வர் உடல் நலம் குறித்து அச்சம் வேண்டாம்: விஜயசாந்தி- நக்மாவும் நலம் விசாரித்தார்
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க இன்று நடிகை விஜயசாந்தியும் அகில இந்திய மகிளா காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் நக்மாவும் அப்பல்லோவிற்கு வரு
சென்னை: முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவைக் காண, பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், திரைப்படத்துறையினரும் வருகை தந்து நலம் விசாரித்து செல்கின்றனர்.
இந்நிலையில் முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிய நடிகை விஜயசாந்தி இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அமைச்சர்களிடம் முதல்வரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் நல்ல நலமோடு இருப்பதாக சொன்னார்கள். இன்னும் பத்து நாட்களுக்குள் அவர் வீடு திரும்புவார் என்று கூறியுள்ளதாக தெரிவித்தார் விஜயசாந்தி. முதல்வர் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிராத்திப்பதாகவும் தெரிவித்தார்.
முதல்வரின் உடல்நிலை குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்த அவர், அம்மாவின் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடி நடக்கும் என தெரிவித்தார்.
இதனிடையே இன்று சென்னையில் மகிளா காங்கிரஸ் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க வந்த அகில இந்திய பொதுச்செயலாளர் நக்மா, அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார். முதல்வரின் உடல்நலம் குறித்து லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரையிடம் கேட்டறிந்ததாகவும் அவர் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications