For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வருமான வரி வழக்கில் 10ம் தேதி கோர்ட்டில் ஆஐராக ஜெ.வுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யாத வழக்கில் நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று ஆஜராகவில்லை. மேலும் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் நேரில் ஆஜராக விலக்கு கோரி தாக்கல் செய்யபப்பட்ட மனுவை கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.

அவர் ஏப்ரல் 10ம் தேதி கோர்ட்டில் ஆஐராக வேண்டும் என்றும் சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்த உத்தரவால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Jayalalithaa skips court appearance in tax fraud case

1993-94ம் ஆண்டில் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வருமான வரி அறிக்கையை ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் தாக்கல் செய்யவில்லை என்பது வழக்கு. இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் இன்று ஆஜராக, சென்னை - எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டபடி ஜெயலலிதா ஆஜராகவில்லை.

இன்றைய வழக்கு விசாரணையின் போது ஜெயலலிதா தரப்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில் நீதிமன்ற விசாரணையில் நேரில் ஆஜராக ஜெயலலிதா விலக்கு அளிக்கக் கோரியிருந்தார்.

இந்த மனுவைப் பரிசீலித்த கோர்ட் அந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஏப்ரல் 10ம் தேதி ஜெயலலிதா கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

தற்போது ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்காளர்களிடம் திமுகவை கடுமையாக சாடிப் பேசி வருகிறார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கையும் சுட்டிக் காட்டிப் பேசி வருகிறார். இந்த நிலையில் அவர் கண்டிப்பாக கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டிருப்பது வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் சென்னை கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமனறத்தை அணுகக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

English summary
Tamil Nadu Chief Minister Jayalalithaa skips court appearance in tax fraud case on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X