என் உண்ணாவிரதத்தால் உலக மக்களுக்கு கேடு வந்துவிடும்- சொல்வது ஜீயர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஆண்டாள் தாயார் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான உண்ணாவிரதம் தொடரும்- வீடியோ

  விருதுநகர்: என் உண்ணாவிரதத்தால் உலக மக்களுக்கு கேடு விளைந்து விடும் என்று சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.

  ஆண்டாளை இழிவுப்படுத்தி வைரமுத்து பேசியதால் அவர் சன்னதிக்கே வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்தன.

  Jeeyar withdraws his hunger strike because of World people's interest

  இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆண்டாள் சன்னதியின் ஜீயர் சடகோப ராமானுஜர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். பின்னர் பல்வேறு காரணங்கள் அதை கைவிட்டார். இந்நிலையில் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கிய அவர் பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் வைரமுத்து வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.

  பிப்ரவரி 3-ஆம் தேதி வரை வைரமுத்து மன்னிப்பு கேட்காததால் பக்தர்களுடன் கலந்து ஆலோசித்து நேற்று முதல் தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

  இந்நிலையில் செண்பகராமன் ஜீயர், எஸ்.வி.சேகர் எச்.ராஜா, பக்தர்கள் உள்ளிட்டோர் உடல்நிலையை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். இதையேற்று உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக இன்று ஜீயர் அறிவித்தார்.

  இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜீயர் கூறுகையில் உலக மக்களின் நன்மைக்காக உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுகிறேன். என்னுடைய உண்ணாவிரதத்தால் உலக மக்களுக்கு கேடு விளையும். இனி உண்ணாவிரதம் இருக்க போவதில்லை என்றார் அவர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Jeeyar explains why he withdraws his hunger strike against Vairamuthu. He says that because of his strike, there will be bad thing happens for world people.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற