For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சவாலான அரசுப் பணியில் சேர விருப்பமா?... கோஸ்ட் கார்ட்டில் நவிக் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் ஆயுதப்படையான இந்தியன் கோஸ்ட் கார்டில் நவிக் பதவிக்ன ஆள்சேர்ப்புக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் ஆயுத படையான இந்தியன் ஸ்ட் கார்டில் நவிக் (ஜெனரல் டியூட்டி) பதவிக்கான ஆள்சேர்ப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்தவர்கள் ஜனவரி 2ம் தேதி வரை இந்தப் பணிக்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் இறுதி செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய கடலோர காவற்படையில் நவிக் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை சேர்க்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் இருந்து கணிதம் மற்றும இயற்பியலில் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்ற 10 மற்றும் +2 தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

01 ஆகஸ்ட் 1996 முதல் 31 ஜூலை 2000 ஆண்டிற்குள் குறைந்தபட்சம் 18 மற்றும 22 வயதுடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வயதும், ஓபிசி அபேட்சகர்களுக்கு 3 வயதும் உயர்ந்தபட்ட தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிப்பது எப்படி?

எழுத்துத் தேர்வு, உடல்திறன் தகுதி மற்றும் மருத்துவ பரிசோதனையில் தகுதி ஆகியவறில் பெற்ற செயல் திறன் அடிப்படையில் மெரிட் வரிசைப்படி அபேட்சர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருக்கம் உள்ளவர்கள் ஜனவரி 2, 2018 தேதி வரை www.joinindiancoastgaurd.gov.in என் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விதிமுறைகளை படிக்கவும்

விதிமுறைகளை படிக்கவும்

இந்த இணையதள பக்கத்திற்கு சென்றவுடன் oppurtunities என்ற பட்டனை கிளிக் செய்து அதில் உள்ள விவரங்கள் முழுவதையும் படித்துப் பார்த்து அதனை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஒருவரே பல முறை விண்ணப்பிக்கும் பட்சத்தில் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வுக்கான கேள்விகள்

எழுத்துத் தேர்வுக்கான கேள்விகள்

ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் மையம் வாரியாக ஒழுங்குபடுத்தப்பட்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். 12ம் வகுப்பு வரை ஆங்கில அறிவு, பொதுஅளிவு, நடப்பு விவகாரங்கள், எண் கணிதம் மற்றும் திறனறிதல் போன்ற பாடங்களை உள்ளடக்கி கேள்விகள் கேட்கப்படும்.

இரண்டு மையங்களில் தேர்வு

இரண்டு மையங்களில் தேர்வு

எழுத்துத் தேர்வுகள் தூத்துக்குடியில் தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி,மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கரூர் மாவட்ட விண்ணப்பதாரர்களுக்கு நடத்தப்படுகிறது. சென்னை மையத்தில் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன சலுகைள் கிடைக்கும்?

என்ன சலுகைள் கிடைக்கும்?

அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்று பணியில் அமர்த்தப்படுபவர்களுக்கு அடிப்படை சம்பளம் 21, 700 ரூபாய் உள்பட இதர சலுகைகளும் அளிக்கப்படும். மேலும் சம்பளவிகிதமானது ரூ. 47600 வரை பதவியேற்புக்கு ஏற்ப அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினருக்கு குறைந்த கட்டணத்தில் அரசு இருப்பிடம், மருத்துவ வசதிகள், ஓய்வூதிய பங்களிப்புகளும் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

English summary
Apply Online for Navik vacancy in Indian Coast Guard within January 2, 2018. The recruitment is on the basis of written, physical and medical tests.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X