For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தர்மபுரி: அரசு மருத்துவமனை குழந்தைகள் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவமனையில் ஏற்கனவே, 12 குழந்தைகள் இறந்துள்ள நிலையில், செவ்வாய்கிழமையன்று மீண்டும் ஒரு குழந்தை இறந்துள்ளதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தர்மபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளில் 6குழந்தைகள் , கடந்த 14ஆம் தேதி அடுத்தடுத்து இறந்தன. அதேபோல், 17 அடுத்தடுத்து 4 குழந்தைகள் இறந்தன. தருமபுரியில் இருந்து சேலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு குழந்தையும் உயிரிழந்தது. இதனையடுத்து கடந்த 4 நாட்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.

இதையடுத்து, 'மருத்துவமனையில் சரியான மருத்துவ வசதிகள் இல்லை எனவும், மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் சரியாக பணியாற்றவில்லை எனவும் பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

மருத்துவமனை சுகாதாரமாக இல்லை என்றும், பச்சிளம்குழந்தைகளை கொசு கடிப்பதை கூட தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், குழந்தைகள் பிறக்கும் போதே எடை குறைவாக இருந்ததாலும், சில குழந்தைகளுக்கு இதய நோய் இருந்ததாலும் அந்த குழந்தைகள் இறந்ததாக மருத்துவமனை தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த வனிதா என்பவரின் பெண் குழந்தை இறந்துள்ளது. இந்த குழந்தை பிறக்கும்போதே இறந்து பிறந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.

பெண்குழந்தைகளின் மரணம் அதிகரிப்பதால் தருமபுரி பகுதியில் பதற்றம் உருவாகியுள்ளது.

English summary
A newborn baby girl, died at the Government Medical College Hospital in Dharmapuri on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X