ஹைகோர்ட் உத்தரவு- ரிசார்ட்டில் இருந்து முக்காடு போட்டு தப்பி ஓடிய செங்கோட்டையன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஆய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டதைத் தொடர்ந்து அங்கு தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலையில் முக்காடு போட்டு தப்பி ஓடினார்.

மகாபலிபுரம் அருகே கூவத்தூரில் 100-க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்துவிடக் கூடாது என்பதற்காக சசிகலா கும்பல் இந்த அராஜகத்தை அரங்கேற்றியுள்ளது.

KA Sengottaiyan escapes from Resort

இந்த விவகாரம் சென்னை உயர்நீதிமன்றத்துக்குப் போனது. இதனால் ரிசார்ட்டில் ஆய்வு நடத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த செய்தி வெளியானதுதான் தாமதம்.. அங்கு தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினார்.

ஆனால் அங்கே செய்தியாளர்கள் இருந்ததால் தலையை கீழே குனிந்து கொண்டு கையில் இருந்த துண்டால் தலையில் முக்காடு போட்டபடியே ஓடிப் போய் காரில் ஏறினார். கூவத்தூர் ரிசார்ட்டில் மன்னார்குடி அடியாட்கள் கட்டுப்பாட்டில்தான் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
After the High court order, Former Minister KA Sengottaiyan escape from the Resort where the 100 ADMK MLAs are allegedly held hostage by Sasikala.
Please Wait while comments are loading...