எம்ஜிஆர் பிறந்தநாள்... சேலத்தில் கபடி போட்டியை உற்சாகத்துடன் தொடங்கி வைத்த ஈபிஎஸ்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கபடி போட்டியை சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேலம் காந்தி மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, கபடி போட்டி நடத்தப்பட்டது. அதனை முதல்வர் பழனிச்சாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்தப்போட்டியில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட கபடி குழுக்கள் கலந்துகொண்டுள்ளன.

MGR: MG Ramachandran's 100th birth anniversary Starts-Oneindia Tamil

இந்தப் போட்டியில் வெற்றி பெறுகிறவர்களுக்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது பரிசுகள் வழங்கப்படும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர். ஈபிஎஸ் அணி தமிழகம் முழுவதும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Salem MGR's centenary birthday kabadi competition opening ceremony by CM Edappadi Palanisamy.
Please Wait while comments are loading...