Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளக்குறிச்சி கலவரத்தில் வதந்தி.. ஒருவரையும் விடமாட்டோம்.. டுவிட்டருக்கு கடிதம் எழுதிய போலீசார்!

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்மமரணம் விவகாரத்தில் நடந்த கலவரம் தொடர்பாக போலீஸ் துறை சார்பில் டுவிட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி படித்தார்.

இந்த மாணவி மாடியில் இருந்து விழுந்து இறந்ததாக பள்ளி நிர்வாகம் கூறியது. இதனை குடும்பத்தினர் மறுத்தனர். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

பள்ளியில் கலவரம்

பள்ளியில் கலவரம்

மாணவியின் இறப்பு நீதி கேட்டு குடும்பத்தினர் தொடர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கடந்த 17 ம் தேதி நடந்த போராட்டம் கலவரமானது. போராடடக்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து சூறையாடினர். வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு தீவைக்கப்பட்டது. இதனால் பதற்றமான சூழல் நிலவியது. மேலும் போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 50க்கும் அதிகமான போலீசார் காயமடைந்தனர். போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சமூக வலைதளம் மூலம் ஆட்சேர்ப்பு

சமூக வலைதளம் மூலம் ஆட்சேர்ப்பு

மாணவியின் மர்மமரணம் தொடர்பான விஷயத்தில் ஏராளமானவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ஆட்களை சேர்த்து ஒரே நேரத்தில் திரண்டு கலவரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. குறிப்பாக வாட்ஸ்அப்பில் குழு துவங்கி போராட்டத்துக்கான முன்னெடுப்புகளை சிலர் செய்திருப்பது தெரியவந்தது. இதனால் கலவரம் தொடர்பான விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது தீவிர விசாரணை நடத்ப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டுவிட்டர் நிறுவனத்துக்கு கடிதம்

டுவிட்டர் நிறுவனத்துக்கு கடிதம்

மேலும் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்களை கைது செய்யவும் தீவிர நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 32 வகையான வதந்திகள் பரப்பப்பட்டதாக போலீசார் கூறும் நிலையில் அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக டுவிட்டர் நிறுவனத்துக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக டுவிட்டரில் வதந்தி பரப்பியவர்களின் விவரங்களை வழங்கும்படி கூறப்பட்டுள்ளது. டுவிட்டர் நிறுவனம் விவரங்கள் வழங்கும் பட்சத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் மர்மமரணம், கலவரம் தொடர்பாக வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Recommended Video

    Thiruvallur School Girl விவகாரம்..நடந்தது என்ன? | *TamilNadu
    11 நாளுக்கு பிறகு நல்லடக்கம்

    11 நாளுக்கு பிறகு நல்லடக்கம்

    முன்னதாக தமிழகம் முழுவதும் மாணவியின் மர்மமரணம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிரதே பரிசோதனை முடிந்தாலும் மாணவியின் உடலை வாங்க மறுத்து அவரது தந்தை சட்ட போராட்டத்தை முன்னெடுத்தார். இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மாணவியின் உடல் 2வது முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் 11 நாளுக்கு பிறகு கடந்த 23ம் தேதி மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+