எனக்கு வரும் செய்திகள் கவலை அளிக்கிறது... கமல் டிவிட்டரில் கலக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வெள்ளம் வர இருப்பதாக வெளியாகும் செய்திகள் தனக்கு கவலை அளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் தெரிவித்து இருக்கிறார். கனமழை குறித்து டிவிட்டரில் கவலை தெரிவித்து இருக்கும் அவர் இது மக்களுக்கும் அரசுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் முன்னறிவிப்பு என்று கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருக்கிறது. இதையடுத்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் பெய்த மோசமான மழை காரணமாக பல இடங்களில் சிறிய அளவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் பல பகுதிகளில் இருக்கும் பல ஏரிகள் நிரம்பி இருப்பதால் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Kamal feels bad in twitter about Chennai flood threat

இந்த நிலையில் சென்னையின் பல பகுதிகள் முழுக இருக்கின்றன என்ற தகவலை அதிர்ச்சி அடைந்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் தெரிவித்து இருக்கிறார். அதில் அவர் ஒரு "ஸ்கிரீன்சாட்'' ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் சென்னையில் உடைய காத்திருக்கும் ஏரிகளின் பட்டியல் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

அதை பகிந்துள்ள கமல்ஹாசன் ''இது மக்களுக்கும், அரசுக்கும் கொடுக்கப்படும் முன்னெச்சரிக்கை தகவல் என்று கூறியுள்ளார். மேலும் மக்களும், அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமுன் காக்க வேண்டும். எனக்கு அவரும் செய்திகள் மிகவும் கவலை அளிக்கின்றன'' என்று கவலையாக எழுதியிருக்கிறார்.

இவர் சில நாட்களுக்கு முன் சென்னை எண்ணூர் துறைமுகத்தை பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rain started reach its peak again in many parts of Tamilnadu. Due to heavy rain most of parts of Chennai got affected worstly. Kamal feels bad in twitter about Chennai flood threat

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற