ஜெ. பாணியில் கமல்ஹாசன்.. 10 மாத குழந்தைக்கு கமலா ரஞ்சிதம் என பெயர் சூட்டினார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: நடிகர் கமல்ஹாசன், ஜெயலலிதா பாணியில், தனது கட்சியை சேர்ந்த தொண்டரின் மகளுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

முன்னாள் முதல்வர், மறைந்த, ஜெயலலிதா, சுற்றுப் பயணங்களின்போது, அதிமுக தொண்டர்களின் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது வழக்கம். இப்போது மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ள கமல்ஹாசனும் அதை செய்துள்ளார்.

Kamal Haasan names 10 month old girl child

கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில், கமல்ஹாசன் நேற்று முதல் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.

அப்போது, கட்சி தொண்டரும் ரசிகருமான ஒருவரின், 10 மாத, பெண் குழந்தையொன்றுக்கு, கமலா ரஞ்சிதம் என்று பெயர் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் டுவிட்டர் கணக்கில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 10 மாதங்கள் அந்த குழந்தையின் பெற்றோர் இந்த மகிழ்வான தருணத்திற்காக காத்திருந்து பெயர் சூட்டியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவிடம் பிறந்து சில வருடங்கள் ஆன குழந்தைகள் கூட பெயர் சூட்டிக்கொள்ள செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Kamal Haasan named 10 month old girl child of his party worker, while he is in tour.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற