For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா மறைவு.. கமல் தெரிவித்த கருத்தால் சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பு

ஜெயலலிதா மறைவு தொடர்பாக, கமல் தெரிவித்துள்ள இரங்கல் செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டிவிட்டில் "சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்" என கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் பெயரையும் குறிப்பிடாமலேயே இதை அவர் டிவிட் செய்துள்ளதால் சிலர் கமல் செயலை கண்டித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சிலர் கமல் பாணியில் அவர் கருத்து கூறியுள்ளார் என்போரும் உண்டு.

கமல் மற்றும் ஜெயலலிதா நடுவே இணக்கம் இல்லை என்ற கருத்து விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதித்தபோது எழுந்தது. ஆனால் பிறகு ஜெயாடிவியில் நடுவராக வீற்றிருந்து அந்த பிணக்கு, கணக்கை சீர் செய்தார் கமல். ஆனால், கடந்த ஆண்டு சென்னையை வெள்ளம் பாதித்தபோது ஆங்கில மீடியாவுக்கு கமல் அளித்த பேட்டி ஆட்சியாளர்களை கோபத்தில் தள்ளியது.

அப்போதைய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கமலை கண்டித்து பெரிய அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

நெட்டிசன்கள் கருத்தை இதில் பாருங்கள்:

ஒன்றுதானே

அன்னாரை இழந்துவாடுவோர் என்பதும் சார்ந்தோர் என்பதும் ஒன்றுதானே.. என்று கூறுகிறது இந்த டிவிட்.

எதிர்ப்பு குரல்

மு.க.வுக்கும் இதர எதிர்கட்சித்தலைவர்களுக்கு இருக்கும் நாகரிகம் கூட இல்லாது இரங்கலைத் தெரிவிக்கும் கமல்

கண்டனம்

பெரிய மனுசன் மரியாதைய கமல் காப்பாத்திக்க மாட்டாரு போல.

கோபம்

கமல் இரங்கல் தெரிவிச்சார்னு தூக்கிட்டு வராதீங்க , அவர் செஞ்சது எள்ளல்

English summary
Actor Kamal Hassan tweet on Jayalalitha kick start controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X