For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியலை மாணவர்கள் கண்காணிக்க வேண்டும்: அதை மறந்ததால்தான் இந்த நிலை: கமல்

அரசியலை மாணவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அதை மறந்ததால்தான் இந்த நிலை என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    நம்மவர்கள் இதையெல்லாம் தவிர்த்திடுங்கள் - கமல் ஹாசன்

    சென்னை: அரசியலை மாணவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அதை பார்க்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

    சென்னை அருகே காலவாக்கத்தில் கல்லூர் மாணவர்கள் இடையே மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் உரையாடல் நிகழ்த்தினார்.

    அப்போது அவர் பேசுகையில் மாணவர்கள் அரசியலை கண்காணிக்க வேண்டும், பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை.

    பெற்றோருக்கு நன்றி

    பெற்றோருக்கு நன்றி

    பள்ளி தாண்டாத என்னை கலைத்தான் காப்பாற்றியது. என் பாதையை தேர்ந்தெடுக்கும் உரிமையை தந்த பெற்றோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    வாழ்வை மாற்றி அமைக்கும் சக்தி

    வாழ்வை மாற்றி அமைக்கும் சக்தி

    கலை என்ற பாதையை கொண்டு முன்னேறியவன் நான். உங்கள் வாழ்வை மாற்றி அமைக்கும் சக்தியாக அரசியல் உள்ளது.

    அரசியல் பயணம்

    அரசியல் பயணம்

    மாணவர்கள் அரசியலை கண்காணிக்க மறந்ததால்தான் இந்த நிலை உள்ளது. மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே அரசியல் பயணம் செய்துவருகிறேன்.

    மகளிர்தான் மலர வேண்டும்

    மகளிர்தான் மலர வேண்டும்

    ஆண்டின் 365 நாட்களும் மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டும். மக்களாட்சியை மகளிர்தான் மலர வைக்க வேண்டும். மக்கள் சேவையில் தான் தனது உயிர் பிரியும்.

    தமிழகத்தை முன்னேர்ற...

    தமிழகத்தை முன்னேர்ற...

    தமிழகத்தை இளைஞர்கள்தான் முன்னேற்ற முடியும். இளைஞர்கள் உதவி இன்றி முன்னேற்றம் சாத்தியம் ஆகாது. சாமானியர்களால்தான் மாற்றத்தை கொண்டு வர முடியும். தேர்தலில் மக்கள் கண்டிப்பாக வாக்கு அளிக்க வேண்டும்.

    மய்யத்தில் இருந்து...

    மய்யத்தில் இருந்து...

    அரசியலை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 17 பேர் எனது முயற்சிக்கு உதவ முன்வந்துள்ளனர். உலகத்தின் மையம் நாம்தான். மய்யத்தில் இருந்து பார்த்தால்தான் நாம் செல்லும் இடத்தை நேர்மையாக முடிவு செய்ய முடியும் என்றார் கமல்ஹாசன்.

    English summary
    Kamal hassan says in Chennai college students that they must supervise the politics. Youth can take the India to progressive step.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X