For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்கள் பிரச்சனைகளுக்கு கமல் தீர்வு காண்பார்- ராமேஸ்வரம் மீனவர்கள்

எங்களின் பிரச்சினையை கமல்ஹாசன் தீர்த்து வைப்பார் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் கூறியுள்ளனர்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    மீனவர்களை சந்தித்த கமல்- வீடியோ

    ராமேஸ்வரம்: கமல்ஹாசனை பார்க்க தடைகளை கடந்து வந்து காத்திருந்த மீனவர்கள், தங்களின் பிரச்சினை நம்மவர் தீர்ப்பார் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளனர்.

    கமலஹாசன் இன்று ராமேஸ்வரத்தில் மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார்.

     Kamal solves our problems fishermen hopes

    கலாம் வீட்டில் அவரது குடும்பத்தினரை சந்தித்து விட்டு வந்த அவர், கலாம் படித்த பள்ளியை பார்வையிட்டு விட்டு பின்னர் ஹோட்டலுக்கு சென்றார்.

    ஹோட்டலில் இருந்து புறப்பட்ட பின்னர் ராமேஸ்வரம் கணேஷ் மகாலில் மீனவர்களை மீனவர்களை சந்தித்து பேசினார்.

    ராமேஸ்வரம் கணேஷ் மகாலில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பல மீனவர்கள் கமல்ஹாசனை காண காத்திருந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மீனவ பெண்கள், கமல் தங்களின் பிரச்சினையை தீர்ப்பார் என்று நம்பிக்கையுடன் கூறினர்.

    கமல்ஹாசனைக் கண்டதும் மீனவர்கள் உற்சாக குரல் எழுப்பினர். அதனைக் கேட்ட கமல் ரொம்ப நன்றி என்று கூறினார். மீனவர்கள் மத்தியில் பேசிய கமல், தமிழகத்தில் முக்கியமான தொழில்களில் மீன்பிடித் தொழிலும் ஒன்று என்றார். மீனவ தொழில் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறிய கமல், பாதுகாப்புடன் தொழில் செய்ய வேண்டும்.

    உங்களுக்கு ஏற்படும் சுக துக்கங்களை பத்திரிக்கை வாயிலாக அறிவதற்கு பதிலாக நான் நேரில் சந்தித்து அறிய வந்திருக்கிறேன். நான் உங்களுக்கு வாக்களிப்பது போல நீங்களும் வாக்களிக்க வேண்டும்.

    மாறி மாறி வரும் ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசினார்களே தவிர அதனை நிறைவேற்றவில்லை என்றும் கூறினார். நீங்கள் செயல்பட வேண்டிய விதம், சர்வதேச சட்டங்களைப் பற்றியும் நாம் பேச வேண்டும்.

    இன்றைக்கு புதிய கட்சி தொடங்க உள்ளோம்.ஒத்த மனமுடையவர்கள் வரவேண்டும். வர வேண்டியவர்கள் வந்தே ஆக வேண்டும் என்றும் கமல்ஹாசன் கூறினார்.

    நாம் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலாம், அதற்கான நாளும், நேரத்தையும் பின்னர் அறிவிப்பதாகவும் கூறினார் கமல்.

    English summary
    Actor turns Politicians Kamal Hassan interacts with fishermen community in Rameswaram.I will be there, will support the community. There is a need to re-discuss international treaties. Your questions cannot be answered with violence says Kamal Haasan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X