பிக்பாஸ் வீட்டுக்கு நடிகர் கமலின் என்ட்ரி.... போட்டியாளர்கள் ஒரே குஷி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் இன்று இரவு நடிகர் கமல்ஹாசன் சர்பிரைஸ் விசிட் அடிக்கிறார். அங்கு சென்று போட்டியாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.

100 நாள்கள் 15 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வெறும் 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் மீதமுள்ளவர்கள் எலிமினேட் செய்யப்பட்டவர்கள். மேற்கண்ட 7 பேரில் பிந்துமாதவி, ஹரீஷ் மற்றும் சுஜா ஆகியோர் பாதியில் என்ட்ரி கொடுத்தவர்கள்.

ஓவியா மட்டும் சில மனஉளைச்சல் காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறிவிட்டார். இதனால் படுத்துவிட்ட நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டை அதிகரிக்க என்டமால் நிறுவனம் படாதபாடு பட்டு வருகிறது.

நிறைவடைய உள்ளது

நிறைவடைய உள்ளது

ஏறத்தாழ இந்த நிகழ்ச்சி 80 நாள்களுக்கு மேல் முடிவடைந்து விட்டன. இன்னும் கொஞ்சம் நாள்களே உள்ளது. இதில் அன்றாடம் போட்டியாளர்களுக்கான சவால்கள் கடுமையாகப்பட்டு வருகின்றன.

கடும் போட்டி

இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்து இருந்தவர்களுக்கும் புதிதாக வந்தவர்களுக்கும் இடையே போட்டி அதிகரித்து வருகிறது. இதனால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் தினமும் கூடுகிறது.

இன்று எலிமினேஷன்

இன்று எலிமினேஷன்

12-ஆவது வாரமான இன்று ஆரவ், வையாபுரி, ஹரீஷ், சினேகன் ஆகியோர் எலிமினேஷன் பட்டியலில் உள்ளனர். அவர்களில் யார் வெளியேறுவார்கள் என்பது குறித்து இன்று தெரியவரும். வையாபுரி வெளியேற்றப்பட வாய்ப்புகள் இருக்கலாம் என்று தெரிகிறது.

சர்பிரைஸ் விசிட்

பிக்பாஸ் வீட்டுக்கு வருமாறு போட்டியாளர்கள் கமல்ஹாசனிடம் கேட்டுக் கொண்டே இருந்தனர். இந்நிலையில் இன்று அவர் திடீரென பிக்பாஸ் வீட்டுக்குள் விசிட் அடித்து அங்குள்ள போட்டியாளர்களிடம் கலந்துரையாடுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

சினேகனின் கவிதை

சினேகனின் கவிதை

நவீன யுகத்துக்கு நக்கீரனே வருக,.... என் பிக்பாஸ் குடும்பத்தின் பிரம்மாவே வருக வருக என கவிதை எழுதி அதை கமல் முன் வாசிக்கிறார் சினேகன். மேலும் சின்ன வயதில் இருந்து கமலின் கன்னத்தின் முத்தமிடும் ஆசையையும் சினேகன் நிறைவேற்றிக் கொள்கிறார். கமலுடன் தனியாக பேச ஆசைப்படுகிறார் ஹரீஷ். அதற்கு அவரது கன்னத்தை கமல் செல்லமாக கிள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Today' episode Ulaga Nayagan Kamal Hassan enters in to Bigg boss house to give surprise to contestants.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற