ஊழலுக்கு எதிராக விசிலடித்த கமல்- #kh #maiamwhistle

Subscribe to Oneindia Tamil
Kamal Speech about his political move-Oneindia Tamil

சென்னை : விசில் தான் பயங்கரமான ஆயுதம் அதை வைத்து கொள்ளையர்களைக் காட்டி கொடுக்க முடியும் என்று 'மையம் விசில்' செயலி வெளியிட்டு விழாவில் நடிகர் கமலஹாசன் பேசினார்.

தனது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை ஆவடியில் மருத்துவமுகாமைத் துவக்கி வைத்தார் நடிகர் கமலஹாசன். மழையின் காரணமாக வெள்ளத்தின் காரணமாக பள்ளிக்கரணை மழை பாதிப்பு குறித்து மேற்கொள்ள வேண்டி இருந்த பயணம் ரத்தானது.

Kamalhassan Launches His app MaiyamWhistle for people on his Birthday

இதனையடுத்து சென்னை தி.நகரில் நடந்த மைய்யம் செயலி வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார் கமலஹாசன். தனது அரசியல் பயணத்திற்கு உறுதுணையாகவும், தன்னையும் மக்களையும் இணைக்கும் ஒரு தளமே இந்த செயலி என்று குறிப்பிட்டார்.

இந்த விழாவில் பேசிய கமல், உலகம் முழுவதும் அரசு அதிகார வர்க்கங்களின் தவறுகளை வெளிக்கொணருபவர்களை விசில் ப்ளோயர் என்று அழைப்பார்கள். அவர்கள் தான் மக்கள்விரோத அரசுகளுக்கு சிம்மசொப்பனாமாய் விளங்குபவரகள். தமிழகத்தில் இருந்த விசில் ப்ளோயர்களின் குறைந்துவிட்டார்களோ என்று தோன்றியதாலே தான்
நான் இந்தப் பணிக்கு வந்து இருக்கிறேன் உங்களையும் அழைத்து வரவே இந்த செயலி என்று குறிப்பிட்டார்.

நமது குரலை இதுவரை கேட்காமல் இருந்தவர்கள், உதாசீனப்படுத்தியவர்கள் இப்போது ஒட்டுமொத்தமாக ஒலிக்கும் நமது குரலை கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இன்னும் இந்தக்குரலை மக்களிடம் இருந்து அதிகார வர்க்கத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த செயலி. ஜனவரியில் முழுமையான பயன்பாட்டிற்கு
வரவுள்ளது இந்த செயலி என்று தெரிவித்தார்.

உலகில் விசிலும் ஒரு பயங்கர ஆயுதம் தான். ரயிலை கிளப்புவதில் இருந்து, திருடர்களை பிடிக்க உதவுவது வரை பல வகையில் விசில் பங்கு வகிக்கிறது. ஒரு எச்சரிக்கை மணி தான் விசில். போர் முரசு போன்றவை எப்படி அடையாளமாக
இருக்கிறதோ அதுபோல இந்த விசில் தான் நமக்கு அடையாளம். இதன் மூலம் தன் பணி தவறுபவர்களை மக்கள் வெளிக்கொண்டுவர முடியும். அதுபோல என் தவறையும் நீங்கள் சுட்டிக் காட்ட முடியும். அதற்காகவே இதற்கு 'மையம் விசில்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது பீட்டா சோதனை முடிந்து இருக்கிறது. இன்னும் சில சேவைகளையும், வசதிகளையும் அதில் இணைக்க வேண்டி இருக்கிறது. விரைவில் அந்த செயலி வெளியிடப்படும். யார் வேண்டுமானாலும் விசிலடிக்கலாம். இந்த செயலி மக்களுக்கும் எனக்குமான ஒரு பாலமாக செயல்படும் என்று கூறினார் கமலஹாசன்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kamlhassan Praises whistle blowers around the world in His app 'maiam whistle' launching function and asks people to come forward and blow the whistle against corruptions.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற