For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாட்டி கையை காட்டுங்க.... "பிபி" பார்த்து வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் டாக்டர் கனிமொழி

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. வெளுக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் குதித்துள்ளனர்.

சென்னையிலும் கடும் வெயிலையும் பாராமல் வேட்பாளர்கள் வியர்க்க விறுவிறுக்க வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

பெரிய தலைவர்கள் ஆங்காங்கு வேன்களிலும், பொதுக் கூட்டங்கள் வாயிலாகவும் வாக்கு சேகரித்து வரும் நிலையில் வேட்பாளர்கள் வீடு வீடாகப் போய் மக்களைச் சந்தித்து வருகின்றனர்.

டாக்டர் கனிமொழி...

டாக்டர் கனிமொழி...

சென்னை தி.நகரில் திமுக சார்பில் டாக்டர் கனிமொழி போட்டியிடுகிறார். இவர் மறைந்த திமுக தலைவர் என்.வி.என்.சோமுவின் மகள் ஆவார். திமுகவினரோடு இணைந்து அவர் வீதி வீதியாக வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

வாக்கு சேகரிப்பு...

வாக்கு சேகரிப்பு...

நேற்று காலை 6 மணி முதல் தொகுதி முழுவதும் உள்ள திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். மாலை நேரங்களில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

ஸ்டதஸ்கோப்போடு...

ஸ்டதஸ்கோப்போடு...

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவேன். நான் சோமுவின் மகள் என்று கூறி எளிமையான முறையில் பேசி வாக்கு சேகரிக்கிறார். போகும்போது கையோடு ஸ்டதஸ்கோப்பையும் கொண்டு செல்கிறார் கனிமொழி. அதை வைத்து முதியோர்களுக்கு ரத்த அழுத்தம் பார்த்துச் சொல்லி பாசத்துடன் பேசி வாக்கு சேகரிக்கிறார்.

கோகுல இந்திரா...

கோகுல இந்திரா...

அமைச்சர் கோகுல இந்திரா அண்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரும் வெளுக்கும் வெயிலுக்கு சற்றும் அஞ்சாமல், முகத்தில் களைப்பு தெரிந்தாலும் கூட விடாமல் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அண்ணாநகரில்...

அண்ணாநகரில்...

இன்று அவர் அண்ணா நகர் தொகுதிக்கு உட்பட வீரப்பாண்டியான் நகர் பகுதில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அவருடன் திரளான அதிமுகவினரும் சென்று வாக்கு சேகரித்தனர்.

பரிதி இளம்வழுதி...

பரிதி இளம்வழுதி...

இதேபோல எழும்பூர் தனித் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதியும் தீவிரப் பிரசாரத்தில் குதித்துள்ளார். கட்சியினர் புடை சூழ அவர் தொகுதியை வலம் வந்தபடி உள்ளார்.

மீண்டும் போட்டி...

மீண்டும் போட்டி...

பரிதி இளம்வழுதி எழும்பூர் தொகுதியில் ஏற்கனவே திமுக சார்பில் உறுப்பினராக இருந்த அனுபவம் உடையவர். கடந்த தேர்தலில் தேமுதிக வேட்பாளரிடம் இதே தொகுதியில் தோற்றார். இப்போது மீண்டும் களம் இறங்கியுள்ளார்.

மோடி முகமூடியுடன் பாஜகவினர்...

மோடி முகமூடியுடன் பாஜகவினர்...

இதேபோல அண்ணா நகரில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக மோடி முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் சென்று பாஜகவினரும் தீவிரப் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தனர்.

தீவிர பிரச்சாரம்...

தீவிர பிரச்சாரம்...

ஒவ்வொரு தொகுதியிலும் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளதால் தேர்தல் களம் சூடாகியுள்ளது.

English summary
Chennai T.nagar DMK candidate doctor Kanimozhi has campaigned in her constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X