For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஸ், மின் கட்டண உயர்வு: செஞ்சாங்களே நல்லா செஞ்சாங்களே- கனிமொழி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: கடந்த தேர்தலின்போது ஜெயலலிதா உங்களை பார்த்து 'செய்வீர்களா செய்வீர்களா?' என்று கேட்டதும் நீங்களும் செய்தீர்கள். பதிலுக்கு அவர் உங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. ஆட்சிக்கு வந்த வேகத்தில் மின் கட்டணம், பேருந்து கட்டணத்தை உயர்த்தினார், பால் விலையை உயர்த்தினார். இது தான் ஜெயலலிதா உங்களுக்கு செய்த நன்றிக்கடன் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக எம்.பி. கனிமொழி சென்னையில் பிரச்சாரம் செய்தார். மக்கள் மத்தியில் பேசிய அவர், திமுக ஒருபோதும் சாதி மோதலை தூண்டாது என்றார்.

அப்போது அவர் மேலும் கூறுகையில்,

அதிமுக ஆட்சி

அதிமுக ஆட்சி

திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முடக்குவது தான் அதிமுக ஆட்சியின் முக்கிய குறிக்கோள் ஆகும். கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளையே ஜெயலலிதா நிறைவேற்றவில்லை. இந்நிலையில் அடுத்த தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க மக்களை சந்திக்க வந்துள்ளார்.

செய்வீர்களா?

செய்வீர்களா?

கடந்த தேர்தலின்போது ஜெயலலிதா உங்களை பார்த்து 'செய்வீர்களா செய்வீர்களா?' என்று கேட்டதும் நீங்களும் செய்தீர்கள். பதிலுக்கு அவர் உங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. ஆட்சிக்கு வந்த வேகத்தில் மின் கட்டணம், பேருந்து கட்டணத்தை உயர்த்தினார், பால் விலையை உயர்த்தினார். இது தான் ஜெயலலிதா உங்களுக்கு செய்த நன்றிக்கடன்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

சென்னையில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடி மக்கள் பாதிக்கப்பட்டபோது வந்து பார்த்தாரா அவர். இல்லை. அதிமுக ஆட்சியில் ஆண்களால் கூட பத்திரமாக வீடு திரும்ப முடியவில்லை. அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது. அறிவித்த வேட்பாளர்களை பல முறை மாற்றிய ஒரே கட்சி அதிமுக.

வைகோ

வைகோ

வைகோ தேர்தலில் போட்டியிடாமல் விலகியது தான் மக்கள் நலக் கூட்டணி கொண்டு வந்த மாற்றமா என்ன? திமுக ஒருபோதும் சாதி மோதலை தூண்டிவிடாது. தேர்தலை நேர்மையான முறையில் சந்தித்து வருகிறோம்.

English summary
DMK MP Kanimozhi slammed CM Jaya for not fulfilling the promises made during last election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X