நீ வேணாம் போ, தோழியே போதும்.. தாலியைக் கழற்றி கணவரிடம் கொடுத்து விட்டு நடையைக் கட்டிய மனைவி!

Subscribe to Oneindia Tamil

மார்த்தாண்டம்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியை ஒருவர் திருமணமான 9 நாளிலேயே தனது கணவருடன் வாழப் பிடிக்கவில்லை என்று கூறி விட்டு தனது தோழி வீட்டுக்குப் போய் விட்டார். தனக்கு தோழியே போதும், கணவர் தேவையில்லை என்று கூறிய அவர் காவல் நிலையம் வந்து தாலியையும் கழற்றிக் கொடுத்த செயல் அனைவரையும் அதிர வைத்து விட்டது.

மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த அந்தக் கல்லூரி ஆசிரியைக்கும், கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒருவருக்கும் டிசம்பர் மாதம் 27ம் தேதி திருமணம் நடந்தது.

Kanniyakumari college teacher opts her friend and abandons husband

சில நாட்களுக்கு முன்பு தனது கணவருடன், தாய் வீட்டுக்குப் போயிருந்தார். அங்கு விருந்தோம்பல் நடந்தது. அதன் பின்னர் 5ம் தேதி தாய் வீட்டில் இருந்து தான் பணியாற்றும் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிபோன அவரது தாயார் மகளை பல இடங்களிலும் தேடினார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதனால், அவர் இரணியல் போலீசில் புகார் செய்தார். புகாரில் கல்லூரிக்கு சென்ற தனது மகள் மாயமாகி விட்டதாகவும் அவரை கண்டுபிடித்து தரும்படியும் கூறி இருந்தார். இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த கல்லூரி ஆசிரியை இரணியல் காவல் நிலையத்திற்கு வந்தார். தனக்கு திருமண வாழ்க்கை பிடிக்காததால் தோழி வீட்டுக்கு சென்று இருந்ததாகவும் கணவருடன் வாழ விரும்பவில்லை என்றும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் ஆசிரியையின் கணவர், தாயார் மற்றும் உறவினர்களை வரவழைத்து சமரச பேச்சு நடத்தினார்கள். அப்போதும் தனது முடிவில் ஆசிரியை பிடிவாதமாக இருந்தார்.

விருப்பம் இல்லாத மனைவியுடன் தானும் வாழ ஆசைப்படவில்லை என்றும், விவாகரத்து பெற தயார் என்றும் ஆசிரியையின் கணவர் கூறி விட்டார். இருப்பினும் மகளின் எதிர்காலம் கருதி, கணவருடன் போய் வாழ் என்று தாயாரும் பேசிப் பார்த்தார். ஆனால் அவர் எதற்குமே இறங்கி வரவில்லை. எனக்கு தோழியே போதும், கணவருடன் வாழ விரும்பவில்லை என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.

இதனால் கோபமடைந்த அவரது தாயார், அப்படியானால், அனைத்து நகைகளையும் கழற்றிக் கொடுத்து விடு என்று கூறினார். இதைக் கேட்ட அந்த ஆசிரியை, தனது தாலி உள்பட அனைத்து நகைகளையும் கழற்றிக் கொடுத்து விட்டார். இதனால் போலீஸார் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+