தமிழகத்துக்கு காவிரி நீர் வருமா? கர்நாடகாவுக்கு நன்றி செலுத்த மீண்டும் முதுகில் குத்துமா பாஜக?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக அமோகமாக வென்று ஆட்சியைப் பிடித்துவிட்டது. கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றுவதற்காகவே காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் முதுகில் குத்திய பாஜக இனி என்ன செய்யும் என்பது உள்ளிட்ட ஏராளமான கேள்விகள் எழுகின்றன.

Karnataka Election Results 2018: What will happen in Cauvery Issue?
 • காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வழக்கில் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு 6 வார கெடு விதித்தது உச்சநீதிமன்றம். ஆனால் கர்நாடகா தேர்தலுக்காக இதைப்பற்றி கிஞ்சித்தும் மத்திய பாஜக அரசு கவலைப்படவில்லை.
 • 6 வார காலத்துக்கு பின்னர் ஸ்கீம் என்றால் என்ன? என கேட்டது மத்திய பாஜக அரசு. அதனைத் தொடர்ந்து கூடுதல் கால அவகாசம் கேட்டது. இப்படியே கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெறும் வரை காலங்கடத்தியது பாஜக.
 • இந்த நிலையில்தான் நேற்று உச்சநீதிமன்றத்தில் தெளிவில்லாத ஒரு வரைவு திட்டத்தை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்தது. தற்போது பாஜக எதிர்பார்த்தபடியே கர்நாடகாவில் அறுவடை செய்துவிட்டது. இப்போது காவிரி பிரச்சனை என்னவாகும் என்பதில் பல கேள்விகள் எழுகின்றன.
 • தமிழக பாஜக தலைவர்கள் கூறியது போல கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்துவிட்ட நிலையில் காவிரி நீர் வருமா?
 • காவிரி நீரை திறந்துவிட்டாலும் தமிழகத்தில் போணியாகப் போவதில்லை என துரோகம் செய்யுமா?
 • அரியாசனம் தந்த கன்னடர்களுக்கு மட்டுமே விசுவாசமாக இருக்கப் போகிறோம் என்கிற முடிவை எடுக்கப் போகிறதா பாஜக?
 • என்ன நடந்தாலும் காவிரி நீரை திறந்துவிட்டு தமிழகத்திலும் கால் பதித்துவிடலாம் என முடிவெடுக்கப் போகிறதா பாஜக?
 • மிகப் பெரிய வெற்றியை தந்த கர்நாடகாவுக்கு பாதகம் தரக் கூடிய வகையிலான ஒரு முடிவை பாஜக எடுக்குமா?
 • கர்நாடகத்துக்கு பாதகம் தராத வகையில் அவசரம் அவசரமாக பல் இல்லாத காவிரி அமைப்பை ஒன்றை உருவாக்குமா?
 • பல் இல்லாத காவிரி அமைப்பு ஒன்றை உருவாக்கினால் தமிழகத்துக்கான காவிரி நீர் முறையாக வருமா?
 • திருவள்ளுவர் சிலையை திறந்து தமிழகத்துடன் நல்லுறவு பாராட்டிய எடியூரப்பா காவிரி நீரை திறந்துவிட்டு அதே போக்கை கடைபிடிப்பாரா?

என ஏராளமான கேள்விகள் எழுகின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
After the BJP Victory in the Karnataka Assembly Elections, now many questions are raising in Cauvery Water disupute.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற