லீவுக்கு போவது போல சிதம்பரம் வீட்டுக்கு ரெய்டுக்கு போறாங்க - காரத்தே தியாகராஜன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ப. சிதம்பரம் வீட்டிற்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு போவதை அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தப்போவதாக காரத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7.30 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் 6 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடைபெறும் வீட்டில் ப.சிதம்பரம் இல்லை என கூறப்படுகிறது, அவரது மனைவி நளினி சிதம்பரம் மற்றும் அவரது மருமகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Karthi Chidambaram condemns Enforcement officials raid at P.Chidambaram house

சென்னை மற்றும் டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காரைக்குடியிலுள்ள ப.சிதம்பரம் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் இந்த ரெய்டு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

சிதம்பரம் வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை ரெய்டுக்கு கராத்தே தியாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மோடி அரசுக்கு ப.சிதம்பரம் சிம்ம சொப்பனமாக இருப்பதால் இதுபோன்ற ரெய்டு நடத்தி அச்சுறுத்துவதாகவும் தியாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு போவதை போல சிதம்பரம் வீட்டில் ரெய்டு நடத்துகிறார்கள்
கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேக்கி வைத்தார் என்றும் ரெய்டு நடத்துவார்கள் என்றும் கராத்தே தியாகராஜன் கிண்டலடித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
Congress functionary Karate Thiyagarajan has slammed the ED raid in former union finance minister P Chidambaram's residences.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற