For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி ஒரே ஒரு தடவை சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை.. ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி இதுவரை 13 சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். இதுவர ஒரு தேர்தலிலும் தோல்வியுற்றதில்லை. இப்போது 14வது முறையாக போட்டியிடுகிறார். ஆனால் அவர் போட்டியிடாத ஒரு தேர்தலும் உண்டு.

கடந்த 1957ம் ஆண்டு முதல் சட்டசபைத் தேர்தலில் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார் கருணாநிதி. 2011ம் ஆண்டு நடந்த தேர்தல் அவருக்கு 13வது தேர்தலாகும். தற்போது 14வது முறையாக களம் காண்கிறார்.

Karunanidhi didnt face Assembly election in 1984

இடையில் 1984ம் ஆண்டு மட்டும் அவர் போட்டியிடவில்லை. அதற்கு என்ன காரணம் என்றால் அப்போது அவர் சட்ட மேலவை உறுப்பினராக அதாவது எம்.எல்.சியாக இருந்தார்.

1984ம் ஆண்டு முதல் 1986ம் ஆண்டு வரை எம்.எல்.சி பதவி வகித்தார். இதன் காரணமாக 1984ல் நடந்த தேர்தலில் மட்டும் அவர் போட்டியிடவில்லை. அதேசமயம், 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவர் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கருணாநிதி மேலவை உறுப்பினராக இருந்தபோது தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சி நடந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
DMK chief Karunanidhi has contested in 13 assembly elections at a stretch. But he didnt face the Assembly election in 1984 since he was an MLC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X