கருணாநிதி நல்ல உடல்நிலையுடன் இருக்கிறார்.. ஸ்டாலின் தகவல்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் நன்றாக இருப்பதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் நன்றாக இருப்பதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு தற்போது உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று ஏற்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக அவர் இப்போது வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வருகிறார். சில நாட்களுக்கு முன் அவருக்கு நடந்த ஆப்ரேஷனில் இருந்தே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறது.
காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல் இப்போது கொஞ்சம் தேறி வருவதாகவும் அவர் நல்ல உடல்நலனுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் நன்றாக இருப்பதாக திமுக செயல்தலைவர்
ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள, கருணாநிதியின் இல்லத்தில் இருந்து, தனது இல்லத்திற்கு செல்கிறார். வீட்டிற்கு செல்லும் முன் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்தார்.
அதில், தலைவர் கருணாநிதி நல்ல உடல்நிலையுடன் இருக்கிறார். அவரது உடலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர் இப்போது ஓய்வுவெடுத்துக் கொண்டு இருக்கிறார். விரைவில் பூரண குணமடைவார் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications