For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"கவிக்கோ" அப்துல் ரஹ்மானின் "குமாரசாமி" கவிதையும்.. லயித்து ரசித்த கருணாநிதியும்!

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த கவிக்கோ அப்துல் ரஹ்மானின் கவிதைகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி மிகப் பெரிய ரசிகர். அதேபோலத்தான் கருணாநிதியின் எழுத்துகளுக்கு ரஹ்மான் மாபெரும் ரசிகர்.

கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி அப்துல் ரஹ்மானின் கவிதை ஒன்றை சிலாகித்து தனது முகநூல் பக்கத்தில் போட்டிருந்தார் கருணாநிதி. அதை மீண்டும் நினைவு கூறுவோம்:

Karunanidhi's pat to Kaviko Abdul Rahman

"அண்மையில் படித்து ரசித்த ஒரு கவிதை:-

நம்முடைய கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய கவிதைகளை நான் எப்போதும் ரசித்துப் படிப்பேன். "இனிய உதயம்" என்ற இலக்கிய இதழில் இந்த மாதம் அவர் எழுதிய கவிதையை நான் படித்து ரசித்தேன். அதன் ஒருசில பகுதிகள்:-

"அரசு ஊழியர்களே! அரசு ஊழியர்களே!
அஞ்சி அஞ்சி லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களே!
உங்களுக்கோர் நற்செய்தி; இனிமேல்
அஞ்சாமல் வாங்குங்கள்; சட்டமே அனுமதிக்கிறது!
ஆனால் எச்சரிக்கை; இருபது சதவீதத்திற்கு
மேலே போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!
அப்படியே போனாலும் கவலையில்லை; நீங்கள்
தப்பாகச் சம்பாதித்த பணமே
உங்களை வெளியே கொண்டு வந்து விடும்!
தப்பே உள்ளே தள்ளும்; தப்பே வெளியே கொண்டு
வந்துவிடும்;
இதுதான் இந்நாட்டின் நீதி!
"தர்மம் வென்றது" என்கிறார்களே;
அதர்மம் அல்லவா வென்றிருக்கிறது என்று
குழம்புகிறீர்களா?
உங்களுக்கு விஷயம் தெரியவில்லை;
அதர்மம் "நியூமராலஜி"ப்படி தன் பெயரைத்
தர்மம் என்று மாற்றிக் கொண்டது!
உங்களுக்குக் கூட்டல் சரியாக வராதா?
அப்படியென்றால் நீதிபதியாகி விடுங்கள்!
அப்புறம் கூட்டல்தான், பெருக்கல்தான்!
அபாண்டமா பழி போடாதீங்க, மத்திய அரசு தலையீடு
இதில் இல்லை; விலையீடுதான் நடந்தது!
நீதிபதிக்கு உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது;
ஏனெனில் அவருக்கிருந்தது வெளிநோக்கம் தான்;
வெளியே விடும் நோக்கம்!"
(இந்தப் பாணியில் அந்தக் கவிதை நீளுகிறது)

English summary
DMK leader in the year 2015 had patted Kaviko Abdul Rahman for his poem on Justice Kumarasamy in Jayalalitha DA case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X