For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நண்பர்கள் தினம்... அன்பழகன் படத்தைப் போட்டு கருணாநிதியும் கொண்டாட்டம்!

Google Oneindia Tamil News

சென்னை: இன்று நண்பர்கள் தினம். பேஸ்புக் அதகளப்படுகிறது. இந்த அமளி துமளியான கொண்டாட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியும் இன்று ஜோதியில் கலந்து விட்டார். தானும், திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும் இருக்கும் அழகான படத்தைப் போட்டு அவரும் நண்பர்கள் தினக் கொண்டாட்டத்தில் உள்ளேன் ஐயா என்று கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் இன்று நண்பர்கள் தினமாக கொண்டாடுகிறார்கள். இதுதான் பேஸ்புக் டவிட்டர் காலமாச்சே.. பேஸ்புக் பக்கம் போனாலே ஒரே நண்பேண்டா டைப் வசனங்களும், புகைப்படங்களும் தூள் பறக்கின்றன.

விதம் விதமான வசனங்கள் உணர்ச்சிப் பெருக்கான வாக்கியங்கள், புகைப்படங்கள் என மக்கள் நண்பர்கள் தினத்தை சிறப்பாக பேஸ்புக்கில் கொண்டாடி வருகின்றனர்.

கருணாநிதியும், அன்பழகனும்

கருணாநிதியும், அன்பழகனும்

திமுக தலைவர் கருணாநிதி, தானும், அன்பழகனும் இருப்பது போன்ற படத்தைப் போட்டுள்ளார். இவர்களின் நட்பு உலகறிந்தது. காலம் கடந்தும், இன்னும் பல காலம் தித்திப்பாக நிலைக்கும் நீண்ட நெடிய நட்பு கொண்ட இருவரும் புன்னகை பூத்த முகங்களுடன் அகம் மற்றும் முக மகிழ்ச்சியுடன் காணப்படும் படம் இது.

அது என்ன நண்பர்கள் தினம்

அது என்ன நண்பர்கள் தினம்

அன்னையர் தினம், தந்தையர் தினம் போல, காதலர் தினம் போல நண்பர்களும் தினமும் சர்வதேச அளவில் பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

தென் அமெரிக்காவில் தொடங்கி

தென் அமெரிக்காவில் தொடங்கி

தென் அமெரிக்காவில்தான் இந்த நண்பர்கள் தினம் முதலில் கொண்டாடப்பட்டதாம். பராகுவே நாட்டில்தான் இதை 1958ம் ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளனர். அங்கிருந்து உலகம் பூராவும் இது பரவி விட்டது.

கிரீட்டிங் கார்டு தயாரிப்பாளர்களின் வேலை

கிரீட்டிங் கார்டு தயாரிப்பாளர்களின் வேலை

உண்மையில் இந்த நண்பர்கள் தினத்தை ஏற்படுத்தியதே கிரீட்டிங் கார்டு நிறுவனங்கள்தானாம். தங்களது கார்டு விற்பனையை மனதில் வைத்து இதைக் கிளப்பி விட்டதாக சொல்கிறார்கள். ஆனால் இன்று பேஸ்புக்கில் நண்பர்கள் தினம் போடும் போட்டைப் பார்த்தால், ஏண்டா இதை கண்டுபிடித்தோம் என்று கார்டு தயாரிப்பாளர்கள் நொந்து போய் விடுவார்கள்.

இந்தியா - வங்கதேசம் - மலேசியாவிலும்

இந்தியா - வங்கதேசம் - மலேசியாவிலும்

இன்று இந்தியா, வங்கதேசம், மலேசியா என உலகின் பல நாடுகளிலும் நண்பர்கள் தினம் பிரபலமாகி விட்டது.

அமெரிக்காவில்

அமெரிக்காவில்

அதேசமயம் அமெரிக்காவில் 1919ம் ஆண்டிலிருந்தே இப்படி ஒரு தினம் கொண்டாடப்படுவதாக தகவல்கள் சொல்கின்றன.

தேதி மாறும்

தேதி மாறும்

அதேசமயம், பல நாடுகளில் வெவ்வேறு தேதிகளிலும் இந்த நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

English summary
DMK president Karunanidhi and many joined int the World Friendship day in in FB and other social networking media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X