For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை கடற்படையால் கைதாகும் தமிழக மீனவர்கள்… பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Karunanidhi writes to PM on TN fishermen
சென்னை: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்து சென்றதால், அந்த மீனவர்களின குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது
இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கப்படுவதாலும், கைது செய்து சிறையில் அடைப்பதாலும் தமிழக மீனவர்கள் படும் முடிவில்லா வேதனை தங்களுக்கு தெரிந்ததுதான். ஏற்கனவே 107 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், இப்போது ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 மீனவர்களை சனிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

முன்னதாக 30-7-2013 அன்று நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 44 மீனவர்கள், காரைக்காலைச் சேர்ந்த 21 மீனவர்களை சிறைபிடித்தனர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்து சென்றதால், அந்த மீனவர்களின குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு உறுதியான மற்றும் பொருத்தமான நடவடிக்கை எடுக்காவிட்டால், நிலைமை இன்னும் மோசமடையும்.

இதுதொடர்பாக இந்தியா மற்றும் இலங்கை அரசுகளுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் நல்ல முடிவு கிடைக்கவில்லை.

தமிழக-இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தையை டிசம்பரில் நடத்தவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த இடைவெளி மிகவும் அதிகம். ஒரு மாதத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே, அந்த பேச்சுவார்த்தை, மேற்கொண்டு கைது நடவடிக்கையை தடுப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும் இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK chief Karunanidhi has written a letter to the PM in TN fishermen issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X