அமலா பால் சொகுசு கார் பதிவு மோசடி விவகாரம்... விசாரணை நடத்த கிரண்பேடி உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil
வசமாக சிக்கிய நடிகை | FILMIBEAT TAMIL

சென்னை: பிரபல தமிழ், மலையாள திரைப்பட நடிகை அமலா பால், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள காரை புதுச்சேரியில் பதிவு செய்து, 20 லட்ச ரூபாய் வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் விசாரணை நடத்த புதுவை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

புதிய மெர்சிடஸ் - எஸ் வகை காரை சமீபத்தில் வாங்கியுள்ளார் நடிகை அமலா பால். இதன் மதிப்பு ரூ 1 கோடி. இந்தக் காரை கேரளாவில் பதிவு செய்தால் ரூ 20 லட்சம் வரியாகச் செலுத்த வேண்டும்.

Kiran Bedi orders probe in Amala Paul care registration issue

எனவே அதைத் தவிர்க்க புதுவையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர் பெயர், முகவரியில் புதுவையில் பதிவு செய்துள்ளார்.

புதுவையில் வசிக்காத, முகவரி இல்லாத ஒருவர் போலியான முகவரியில் காரைப் பதிவு செய்தது மோசடியாகும். இதில் புதுவை, கேரளா இரு மாநிலங்களுமே நடவடிக்கை எடுக்க முடியும். கேரளா போலீசார் ஏற்கெனவே விசாரணையைத் தொடங்கிய நிலையில், அடுத்து இந்த விவகாரத்தை விசாரிக்குமாறு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் அமலா பாலின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Pudhuchery Governor Kiran Bedi has ordered for a probe in Amala Paul care registration issue.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற