அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் மீது நடவடிக்கை... புதுச்சேரியில் கிரண்பேடி அதிரடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

புதுச்சேரியின் முதலியார்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருப்பவர் பாஸ்கர். இவர் சாலை போக்குவரத்து அலுவலகத்தில் வாகன எண் பதிவுக்கு வந்த போது விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.

Kiran Bedi takes action against ADMK MLA Baskar

இந்த விஷயத்தில் நிறைய பணம் மோசடி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இந்த விஷயம் அதிமுக கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். இதனால் அவர் மீது போலீஸ் நிலையத்தில் வழக்கு பதியப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் அடிக்கடி தலையிடுவதாகவும் கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Puducherry Lieutenant Governor Kiran Bedi takes action against ADMK MLA Baskar on his car registration issue. Baskar registered his car in wrong way in Puducherry.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற