For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மரபை மீறி கோவை அதிகாரிகளுடன் ஆளுநர் திடீர் ஆலோசனைக்கு எதிர்ப்பு- த.பெ.தி.க முற்றுகையால் பரபரப்பு

கோவையில் மாவட்ட நிர்வாகத்தினருடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

கோவை : அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 Kovai based periyar activist group arrested for protesting against governor's meeting with officials

இதனிடையே ஆளுநர் ஆலோசனை நடத்தும் அரசு விருந்தினர் மாளிகை அருகே தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அந்த அமைப்பின் தலைவர் கு. ராமகிருஷ்ணன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதை கண்டித்து அப்போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தந்தை பெரியார் திராவிட கழகத்தினரின் திடீர் போராட்டத்தால் அந்த்ப் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

English summary
Coimbatore based periyar activist groupr arrested for protesting against goernor Banwarilal purohit meeting with district administrators.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X