10 படத்தில் நடித்து விட்டு நாடாள நினைப்பது தவறு.. கிருஷ்ணசாமி யாரைச் சொல்கிறார் தெரிகிறதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: 10 படங்களில் நடித்து விட்டு நாடாள நினைப்பது தவறு என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி காட்டமாக தெரிவித்தார்.

நெல்லை தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் புதிய தமிழகம் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சம்பள உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக போராடி தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த 17 தோட்ட தொழிலாளர்களுக்கு ஆற்றங்கரையில் நினைவு தூண் அமைக்க வேண்டும்.

யாரும் முன்வரவில்லை

யாரும் முன்வரவில்லை

நினைவு தூண் கோரிக்கையை எந்த ஆட்சியும் கண்டுகொள்ளவில்லை. உயிர் நீத்தவர்களுக்கு ஓரு நினைவு மண்டபமும் கட்டி தர வேண்டும். தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினமும் ரூ.150 சம்பளம கேட்டு நாம் ஏற்கனவே போராடியுள்ளோம். இப்போது ரூ.291 சம்பளமாக கிடைக்கிறது.

உள்ளாட்சி தேர்தல் வேண்டாம்

உள்ளாட்சி தேர்தல் வேண்டாம்

தமிழகத்தில் எடப்பாடி அரசு இப்போதைய சட்டசபையை வெற்றிக்கரமாக நடந்தி முடித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலை இப்போது நடத்துவது சரியாக இருக்காது. மழையின்றி மக்கள் வறட்சியால் வாடுகின்றனர். இதெல்லாம் மாறிய பின்னர் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம்.

10 படங்கள்

10 படங்கள்

பொதுவாக அரசியலுக்கு வருவோர் முதலில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று படிப்படியாக தான் வருவர். ஆனால் சிலர் 10 படங்களில் நடித்து விட்டு நாடாள நினைக்கின்றனர்.

Rajini, Vijay's Next political Move-Oneindia Tamil
யாராக இருக்கும்

யாராக இருக்கும்

இனிமேல் சினிமா மாயை எடுபடாது. இவ்வாறு அவர் கட்டமாக தெரிவித்தார். கிருஷ்ணசாமி யாரை பற்றி இப்படி சொல்கிறார் உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?. ஒருவேளை விஷாலாக இருக்குமோ என பேசிக்கொள்கிறார்கள் நெட்டிசன்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Krishnaswamy slam film actors who wants to enter politics and says they first contest in local body election.
Please Wait while comments are loading...