கே.எஸ்.அழகிரி வீட்டில் கல்யாணம்! பழக்கூடையுடன் பத்திரிகை வைத்து ஸ்டாலினுக்கு நேரில் அழைப்பு!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தனது மகள் திருமணத்தை ஒட்டி அதற்கான திருமண வரவேற்பு அழைப்பிதழை முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.
முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது கே.எஸ்.அழகிரியுடன் திருநாவுக்கரசர் எம்.பி., கோபண்ணா உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் உடனிருந்தனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை பொறுத்தவரை தனது மகள் திருமணத்தை எளிமையாக நடத்துகிறார். மிக நெருங்கிய குடும்ப உறவுகளுக்கும் மட்டும் இதற்கான அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

அதே வேளையில் திருமண வரவேற்புக்கான விழாவை சற்று விமரிசையாக நடத்த திட்டமிட்டுள்ள கே.எஸ்.அழகிரி, இதற்கான அழைப்பிதழை அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வழங்கி வருகிறார்.
அந்த வகையில் காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சியின் டெல்லி மேலிடத் தலைவர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.
அந்த வரிசையில் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று அவரது முகாம் அலுவலகத்தில் கட்சியினருடன் சென்று நேரில் சந்தித்து தனது மகள் திருமண வரவேற்பு அழைப்பிதழை வழங்கியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினும் இந்த விழாவில் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார். வரும் 25ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் வரவேற்பு விழா நடைபெறுகிறது.
அரசியல் கட்சித் தலைவர்களை பொறுத்தவரை தங்கள் குடும்ப இல்ல விழாக்களுக்கு முதல்வருக்கு அழைப்பிதழ் கொடுக்கச் செல்லும் போது குடும்பத்தினரை அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால் கே.எஸ்.அழகிரியோ கட்சியினரை அழைத்துச் சென்று பழக்கூடையுடன் பத்திரிகை வைத்திருக்கிறார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications