For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ஊழல் லலித் மோடி' - சுஷ்மா தொடர்பு: மத்திய அரசுக்கு ப.சிதம்பரத்தின் 7 கேள்விகள்

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: லலித் மோடி விவகாரத்தில் காங்கிரஸ் அரசு எடுத்த நடவடிக்கைகள் இங்கிலாந்து அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் வாயிலாகவே தெரிந்து கொள்ள முடியும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.

சென்னையில் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.

Lalit Modi - Sushma Row: P Chidambaram's 7 questions to Union Govt

அப்போது அவர் கூறுகையில்,

  • லலித் மோடி விவகாரத்தில் மன்மோகன் சிங் எதுவுமே நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை மறுக்கிறேன். 2010ல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது அமலாக்கத் துறையின் பரிந்துரைப்படி லலித் மோடியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது.
  • காங்கிரஸ் தலைமையிலான அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தது தொடர்பான விஷயங்கள் இங்கிலாந்து அரசுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட கடிதங்கள் வாயிலாகவே தெரிந்து கொள்ளலாம்.
  • லலித் மோடிக்கு புதிய பாஸ்போர்ட் தர முடிவெடுத்தது யார்? இதை பொதுமக்களுக்கு பகிரங்கமாக மத்திய அரசு தெரிவித்தாக வேண்டும்.
  • காங்கிரஸ் ஆட்சி காலத்தில் லலித் மோடி வெளிநாடு செல்ல முடியாமல் இருந்ததார். அதே சமயம், இந்த விவகாரத்தில் சுஷ்மா சுவராஜை, லலித் மோடி தொடர்பு கொண்டிருப்பது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
  • இந்திய தூதரகத்தை அணுக லலித் மோடிக்கு சுஷ்மா ஏன் அறிவுறுத்தவில்லை?
  • லலித் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு ஏன் மத்திய அரசு கூறவில்லை?
  • பாஸ்போர்ட் ரத்தான பிறகும் இந்திய பிரஜையான லலித் மோடி இங்கிலாந்திலேயே தங்கியிருப்பது எப்படி?
  • இந்தியரான லலித் மோடிக்கு பிரிட்டிஷ் பயண ஆவணங்கள் வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் வேண்டியது ஏன்... இந்தியப் பயண ஆவணங்களே போதுமானதாயிற்றே?
  • அப்படியே மனிதாபிமான உதவி என்றாலும் கூட, இந்திய அமைச்சரான இவர் நமது இந்திய தூதரகத்துக்கல்லவா அதுபற்றி சொல்லியிருக்க வேண்டும்? இங்கிலாந்து எம்பிக்களுடன் ரகசியமாகப் பேசியது ஏன்?

-என கேள்விகளை எழுப்பினார்.

அரசியல் காரணமாக என்னை பழி வாங்கிவிட்டார் சிதம்பரம் என்று லலித் மோடி கூறியிருப்பது பெரும் நகைப்புக்குரியது என்றும் சிதம்பரம் தெரிவித்தார்.

English summary
Senior Congress leader and former Union Minister P Chidambaram was addressed a press conference on Wednesday about the controversy surrounding the UK visa for former IPL boss Lalit Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X