தீபாவளியன்று "மப்பு" அதிகமானால் எங்களுக்கு போன் போடுங்கள்.. நாங்க இருக்கோம்.. மது குடிப்போர் சங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளியன்று குடித்துவிட்டு மப்பு அதிகமானால் எங்களுக்கு போன் போடுங்கள்.. எங்களது டிரைவர் உங்களை வீட்டில் பத்திரமாக கொண்டு போய் இறக்கிவிடுவார் என மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் தெரிவித்துள்ளது.

பி.செல்லப் பாண்டியன் தலைமையிலான இந்த சங்கம் குடிகாரர்கள் நலனுக்காக இயங்கி வருகிறது. விதம் விதமான கோரிக்கைகளுடன் தினுசு தினுசாக போராட்டம் நடத்துவது இவர்களது செயல்பாடுகளில் ஒன்று. அந்த வகையில் இந்தாண்டு தீபாவளி முதல் குடித்துவிட்டு மப்பு அதிகமானால் அவர்களுக்கு இலவச டிரைவர் உதவி செய்வதாக அறிவித்துள்ளது.

Liquor consumers association leader statement about deepavali offer

இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் பி. செல்லப்பாண்டியன் விடுத்துள்ள அறிக்கை:

சென்னை மாநகரில் நட்சத்திர ஓட்டல் பார்களில் மது குடித்துவிட்டு ஏற்படும் விபத்துக்களை தடுத்திட, வரும் தீபாவளி முதல் மது குடிப்போர் பார்கலுக்கு, ஓட்டல்களுக்கு செல்லும் முன் தங்களது பெயர், வாகன எண்ணை எங்களிடம் பதிவு செய்தால், போதை ஏறிய பின் "போன் போட்டால், உடனே எங்கள் டிரைவர்கள் இலவசமாக இல்லம் சேர்ப்பர். என்பதை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Liquor consumers association leader chellapandiyan arranged free drivers for drinkers
Please Wait while comments are loading...