லோக்சபா தேர்தல்.. உங்கள் வாக்குச்சாவடி எங்கே இருக்கிறது?.. தெரிந்து கொள்ள இதை படியுங்கள்!
லோக்சபா தேர்தலில் உங்கள் வாக்குசாவடிகளை தெரிந்து கொள்ள நீங்கள் பின்வரும் வழிகளை பயன்படுத்த முடியும்.
சென்னை: லோக்சபா தேர்தலில் வாக்காளர்கள் தங்கள் வாக்குசாவடிகளை தெரிந்து கொள்ள பின்வரும் வழிகளை பயன்படுத்த முடியும்.
லோக்சபா தேர்தல் நாடு முழுக்க நடந்து வருகிறது. தமிழகத்தில் நாளை மறுநாள் லோக்சபா தேர்தல் நடக்கிறது. லோக்சபா தேர்தலுடன் தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கிறது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பிரச்சாரம் இன்றோடு முடிவடைகிறது. இதனால் இன்று கட்சிகள் எல்லாம் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவையும் சேர்த்து 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு 10 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்க நிறைய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் ஒருபகுதியாக 1950 வாக்காளர் உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு இதில் பதில் அளிக்கப்படும்.
இந்த தேர்தலில் மொத்தம் 11 ஆவணங்கள் மூலம் வாக்களிக்க முடியும். அதன்படி வாக்காளர் அடையாள அட்டை, வங்கி, அஞ்சல் அலுவலகத்தால் அளிக்கப்பட்ட புகைப்படம் உள்ள கணக்கு புத்தகங்கள், பான்கார்டு, என்.டி.ஆர். கீழ் ஆர்.ஜி.ஐ. அளிக்கப்பட்ட ஸ்மார்டு கார்டு, மகாத்மா காந்தி ஊரக வேலை பணிநிலை அட்டை, தொழிலாளர் நலத்துறையின் திட்டத்தில் அளிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நலவாழ்வு காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், மத்திய மாநில அரசு சார் பொது நிறுவனங்கள்,
ஆதார் கார்டு, பொது நிறுவனங்கள் இவற்றால் அளிக்கப்பட்ட புகைப்படம் உள்ள பணியிட அடையாள அட்டைகள், புகைப்படம் உள்ள ஓய்வூதிய ஆவணம், தேர்தல் நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட வாக்குச்சீட்டு, பாராளுமன்ற, சட்டசபை, சட்ட மேலவை, உறுப்பினர்களால் அளிக்கப்பட்ட அலுவல் அடையாள அட்டைகள் மூலம் வாக்களிக்க முடியும்.
அதேபோல் உங்கள் வாக்குசாவடியை தெரிந்து கொள்ள நிறைய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒன்இந்தியா பக்கத்திற்கு சென்று உங்கள் தொகுதி விவரங்களை அளித்து வாக்குசாவடிகளை தெரிந்து கொள்ள முடியும்.
https://tamil.oneindia.com/dharmapuri-lok-sabha-election-result-368/#pollingbooth
அதேபோல் பின்வரும் அதிகாரப்பூர்வ தேர்தல் ஆணையத்தின் பக்கங்களிலும் உங்கள் விவரங்களை அளித்து வாக்குசாவடிகளை தெரிந்து கொள்ள முடியும்.
http://ecapp0155.southindia.cloudapp.azure.com/WCB/
மேலும் ''ECIPS'' (space) ''வாக்காளர் அடையாள அட்டை எண்'' என்பதை 1950 என்ற எண்ணுக்கு அனுப்பியும் உங்கள் வாக்குசாவடி எங்கே இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications