கவிழ்ந்த மினி லாரி.. சாலையில் ஆறாக ஓடிய மீன்களால் பரபரப்பு

By: KMK ESAKKIRAJAN
Subscribe to Oneindia Tamil
  குளம் நிரம்பியதால் ரோட்டில் குவியும் மீன்கள்-வீடியோ

  தூத்துக்குடி: மீன்கள் ஏற்றிச்செல்லப்பட்ட மினி லாரி கவிழ்ந்ததால் ரோட்டில் மீன்கள் சிதறிக்கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மதுரை முல்லை நகரை சேர்ந்தவர் மாயக்கண்ணன். டிரைவரான இவர் கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியில் இருந்து மினி லாரியில் மீன்களை ஏற்றி கொண்டு மதுரைக்கு புறப்பட்டார்.

  lorry fell down fishess scattered on the road

  இவருடன் கிளினர் அருண் இருந்துள்ளார். கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் நான்கு வழிசாலையில் செல்லும் போது எதிர்பாரா விதமாக மினி லாரியின் பின்பக்க டயர் வெடித்துள்ளது.

  இதில் நிலைதடுமாறிய லாரி சாலையில் விழுந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் மாயக்கண்ணன், கிளி்னர் அருண் ஆகியோர் லாரியில் சிக்கி காயமடைந்தனர்.

  மேலும் லாரியில் ஏற்றியிருந்த மீன்கள் சாலையில் ஆறாக சிதறி ஓடியதுள்ளது. இதையறிந்த அப்பகுதி மக்கள் லாரி கவிழ்ந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். டிரைவர் மாயக்கண்ணனையும், கிளினரையும் மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் ரோட்டில் சிதறி ஓடிய மீன்களை போட்டி போட்டுக் கொண்டு அள்ளி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாலாட்டின்புதூர் போலீசார் விரைந்து சென்று கூட்டத்தை கலைந்து லாரியை மீட்டனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A Lorry felldown on the road near in Tuticorin. Fishess scarttered on the road.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற