For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிரட்டும் புதுப் புயல்: பாம்பன், கடலூரில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: அந்தமான் அருகே உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பாம்பன், கடலூர் துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலோரப்பகுதி மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க துறைமுக அதிகாரிகள் அறிவிறுத்தி உள்ளனர்.

Low pressure in Bay of Bengal intensifies into depression

அந்தமான் அருகே வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி விசாகப்பட்டினம் கடல் பகுதியில் தென்கிழக்கு திசைப் பகுதி நோக்கி 650 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதியில் வட மேற்கு திசைப்பகுதியில் 540 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்றின் வேகம் அதிகரித்து வலுவடைந்து வருகிறது.

இதையடுத்து, கடலோரப் பகுதியான பாம்பன், ராமேஸ்வரம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், பாம்பன் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், கடலோரப் பகுதியில் வசிக்கும் மீனவர்கள் பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கடலூர் துறைமுகத்திலும் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

English summary
The low pressure area, which has been persisting in the Bay of Bengal, has now intensified into a depression. At present, it is centered at 12.5°N latitude and 87.5°E longitude in the central and adjoining southwest Bay.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X