For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2016ல் ஸ்டாலின்!... பேஸ்புக்கில் "பேஸ்மென்ட்"டைப் போட்டார் மு.க.ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தல் தோல்வியைப் பின்னுக்குத் தள்ளி விட்டு 2016ல் வரப் போகும் சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராகி விட்டார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

Stalin For 2016 என்ற பெயரில் பேஸ்புக்கில் ஒரு பக்கம் திறந்துள்ளனர். இந்தப் பெயரே, அடுத்த தேர்தலில் திமுக வென்றால் மு.க.ஸ்டாலின்தான் முதல்வர் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது.

சட்டசபை உறுப்பினராக, ஸ்டாலின் செய்து வரும் வேலைகளை இந்தப் பேஸ்புக் பட்டியலிட்டு வைத்து வருகிறது. கூடவே ஸ்டாலின் குறித்த செய்திகளும் இடம் பெறுகின்றன.

லோக்சபா தேர்தல் தோல்வி

லோக்சபா தேர்தல் தோல்வி

மு.க.ஸ்டாலின் தலைமையில், வேட்பாளர் தேர்வு முதல் பிரசார உத்திவரை ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் திமுக சந்தித்த முதல் தேர்தல் லோக்சபா தேர்தல். ஆனால் இதில் திமுகவுக்கு ஒரு இடத்திலும் இடம் கிடைக்கவில்லை.

உள்ளடி வேலைகள்- உட்கட்சிப் பூசல்கள்

உள்ளடி வேலைகள்- உட்கட்சிப் பூசல்கள்

உள்ளடி வேலைகளும், உட்கட்சிப் பூசல்களும் திமுகவின் பெரும் தோல்விக்கு முக்கியக் காரணங்களாகி விட்டன. இதையடுத்து களையெடுப்பு வேலைகளும் நடந்தேறின.

பேஸ்புக்கில் புது அவதாரம்

பேஸ்புக்கில் புது அவதாரம்

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின், பேஸ்புக்கில் புதிய பக்கத்தைத் திறந்துள்ளார். Stalin For 2016 என்ற பெயரிலான இந்த பேஸ்புக் பக்கம் வரும் சட்டசபைத் தேர்தலுக்கு ஸ்டாலின் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதற்கான அச்சாரமாக தெரிகிறது.

வருங்கால முதல்வர்

வருங்கால முதல்வர்

வருங்கால முதல்வர் ஸ்டாலின்தான் என்பதை பறை சாற்றும் வகையிலான வாசகங்கள், புகைப்படங்கள் பக்கத்தில் காணப்படுகின்றன. ஸ்டாலினின் பல்வேறு லட்சியங்கள், கொள்கைகளையும் படம் பிடித்துக் காட்டியுள்ளனர்.

சாதனைகள்

சாதனைகள்

ஒரு எம்.எல்.ஏவாக அவர் செயல்பட்டு வரும் விதம், எளிதில் அணுகக் கூடிய தலைவர் என்ற ரீதியில் வாசகங்களும் செய்திகளும் இடம் பெற்றுள்ளன.

ஜூலை 6 முதல்

ஜூலை 6 முதல்

ஜூலை 6ம் தேதி இந்த பேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

டிவிட்டர் - யூடியூபிலும்

டிவிட்டர் - யூடியூபிலும்

இதேபோல டிவிட்டர். யூடியூபிலும் கூட புதிய பக்கங்களைத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே ஸ்டாலினுக்கு தனியாக பேஸ் புக் பக்கம், இணையதளம் ஆகியவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2016 தேர்தலை மனதில் வைத்து இந்தப் புதிய பக்கம் பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ளது.

English summary
DMK leader M K Stalin has launched a new FB page for Election 2016.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X