தமிழக அரசு கோமா நிலையில் உள்ளது... சட்டசபையை உடனே கூட்ட ஸ்டாலின் வலியுறுத்தல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுகவினர் மாறி மாறி சண்டை போட்டுக்கொள்வதை நிறுத்திவிட்டு மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்த சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

2017 -18ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டம் முழுவதும் முடியாமல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பின்னர் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் பட்ஜெட் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சபாநாயகர் தனபாலிடம் இன்று மனு அளித்தார்.

M.K. Stalin saying that tn government is in coma stage

இதனையடுத்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

மானிய கோரிக்கையில் விடுபட்ட துறைகள் குறித்து விவாதிக்க உடனடியாக சட்டசபையைக் கூட்ட வேண்டும். இதற்கு முதலமைச்சரின் அனுமதியை கேட்டு பதில் அளிப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.

முதலமைச்சரையும் நேரில் சந்தித்து மனு அளிக்க காத்திருந்தோம். ஆனால் அரை மணி நேரம் காத்திருந்தும் அவரை சந்திக்க முடியவில்லை, இந்த நிலையில் தான் தமிழக அரசு இன்று உள்ளது.

இதுவரை ஒரு அணியாக இருந்து கொள்ளையடித்தோர் இன்று ஃபெரா கும்பல், மாஃபியா கும்பல் என தனித்தனியாக பிரிந்து கொள்ளையடிக்கின்றனர். மக்கள் பிரச்னைகள் பற்றி இவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. தமிழக அரசு தற்போது கோமா நிலையில் உள்ளது.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
M.K.Stalin has urged speaker to convene TN assembly budget session immediately
Please Wait while comments are loading...