செப். 21ஆம் தேதி தலைமைச் செயலர் நேரில் ஆஜராகணும் - ஹைகோர்ட் கிளை உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: செப்டம்பர் 21ம் தேதி தலைமைச்செயலாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போரட்டத்தை கைவிட சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டும் அரசு ஊழியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கில் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த 3 நிர்வாகிகள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று ஆஜராகினர். அப்போது 3 நீர்வாகிகளிடமும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

டிஸ்மிஸ் செய்யவேண்டுமா?

டிஸ்மிஸ் செய்யவேண்டுமா?

அரசு ஊழியர்கள் ஒரு மணிநேரத்தில் காத்திருப்பு போராட்டத்தை கைவிடாவிட்டால் டிஸ்மிஸ் செய்ய முடியும் என்றும் எச்சரித்த நீதிபதிகள், போராட்டத்தை கைவிடாவிட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள்.

என்றும் கூறினர்.

உடனே கைவிடுங்கள்

உடனே கைவிடுங்கள்

அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தும் ஊழியர்கள் உடனே வெளியேற வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். நிபந்தனையின்றி வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

நீதிபதியின் உத்தவை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

2 மணிக்குள் பணிக்கு திரும்புங்கள்

2 மணிக்குள் பணிக்கு திரும்புங்கள்

இதனிடையே பகல் 2 மணிக்குள் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை புனிதமான நாள் என்பதால் இன்றே பணிக்கு திரும்புங்கள் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

தலைமைச் செயலர் ஆஜராக ஆணை

தலைமைச் செயலர் ஆஜராக ஆணை

மேலும் செப்டம்பர் 21ம் தேதி தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராகி இவ்வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நீதிபதி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

விடுவிக்க உத்தரவு

விடுவிக்க உத்தரவு

போராட்டத்தில் கைதான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை விடுவிக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். செப்டம்பர் 7ஆம் தேதி போராட்டம் நடத்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை மீறி போராடியவர்களை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Madras HC of Madurai bench has ordered the TN Govt's chief secretary to be appeared in person regarding the Teachers' strike.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற