சொகுசு கார் இறக்குமதி வழக்கு: சசிகலா கணவர் நடராஜன், தினகரன் தம்பிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி
சொகுசு கார் இறக்குமதியில் வரி ஏய்ப்பு செய்த வழக்கில் சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
Recommended Video

சென்னை: வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பு செய்த வழக்கில் சசிகலா கணவர் நடராஜன், தினகரன் தம்பி பாஸ் என்கிற பாஸ்கரனுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

1994-ம் ஆண்டு லண்டனில் இருந்து லெக்ஸஸ் சொகுசு காரை நடராஜன் இறக்குமதி செய்தார். புதிய காரை இறக்குமதி செய்ததற்காக ரூ1.6 கோடி வரி செலுத்த வேண்டும்.
ஆனால் புதிய காரை 1993-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பழைய கார் என கூறி நடராஜன் வரி ஏய்ப்பு செய்தார். இது தொடர்பான வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் 2010-ம் ஆண்டு சசிகலா கணவர் நடராஜன், தினகரனின் தம்பி ஜெஜெ டிவி பாஸ் என்கிற பாஸ்கரன், லண்டனைச் சேர்ந்த யோகேஷ் பாலகிருஷ்ணன், இந்தியன் வங்கி மேலாளர் சுஜாரிதா ஆகியோருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது சிறப்பு நீதிமன்றம்.
இத்தீர்ப்பை எதிர்த்து நடராஜன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இன்றைய தீர்ப்பில், நடராஜனின் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டு 2 ஆண்டு சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. அப்போது நடராஜன் சரணடைய அவகாசம் கோரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் நடராஜனின் கோரிக்கையை நிராகரித்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications