For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக டிஜிபிக்கு எதிரான வாக்கி டாக்கி புகார் மனு ஹைகோர்ட் தள்ளுபடி

வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு செய்ததாக டிஜிபிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கிய விவகாரத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் புதிய ஆளுநர் புரோஹித்தை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், வாக்கி டாக்கி முறைகேடு தொடர்பாக டி.ஜி.பிமீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

Madras HC dismiss PIL against State DGP

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் வேல்முருகன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், காவல்துறைக்கு வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டபோது, மோட்டோரோலா சொல்யூசன்ஸ் என்ற ஒரு நிறுவனம் மட்டுமே ஒப்பந்தப்புள்ளிகளை கோரியிருந்தது என்றும், அதனால் அந்த நிறுவனத்திற்கு 83.45 கோடிக்கான ஒப்பந்தத்தை காவல்துறை தலைமை இயக்குனர் வழங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2017-18 ஆம் ஆண்டில் 47.56 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதை கொண்டு 10 ஆயிரம் வாக்கி-டாக்கிகள் வாங்கப்பட வேண்டும் என்றும், ஆனால் 83.45 கோடி செலவு செய்து வெறும் 4000 வாக்கி-டாக்கிகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் செந்தில் தெரிவித்துள்ளார்.

48 ஆயிரம் மதிப்புள்ள ஒரு வாக்கி-டாக்கியை 2 லட்சம் ரூபாய் கொடுத்து காவல்துறை வாங்கி மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதுதொடர்பாக டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் செந்தில் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் டிஜிபி மீது நடவடிக்கை எடுக்ககோரி தலைமைச் செயலாளருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பத்திரிகை செய்தி அடிப்படையில் மனு தாக்கல் செய்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார். மக்களின் வரிப்பணம் வீணாகக் கூடாது என்பதில் பொதுமக்களுக்கு அக்கறை உள்ளது என்று கூறிய நீதிபதிகள், இந்த மனுவில் போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இதே போல உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் டிஜிபிக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

English summary
The Chennai High Court today rejected a PIL filed by social activist Velmurugan. The Tamil Nadu Director-General of Police for getting involved in a scam while procuring walkie-talkies for Tamil Nadu police personnel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X