பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு... நாளை விசாரிக்கிறது ஹைகோர்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : முதல்வர் பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலன் தொடர்ந்த வழக்கை நாளை விசாரணைக்கு ஏற்க தலைமை நீதிபதி ஒப்புகொண்டுள்ளார்.

அ.தி.மு.க.வின் இரு அணிகள் இணைந்த பின்னர் அக்கட்சியில் உள்ள டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியடைந்து வெளியேறினர். மேலும், முதல்வர் பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர்.

 Madras High court hearing DMK case seeking floor test

இதனால், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்ற சர்ச்சை எழுந்தது. மொத்தம் உள்ள 134 எம்.எல்.ஏ.க்களில், 19 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி. தினகரனை ஆதரிப்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு 115 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆளுநர் வித்யாசாகர் ராவை வந்தித்து முதல்வர் பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் இது வரை ஆளுநர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனைத்தொடர்ந்து அளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று ஸ்டாலின் கூறியிருந்தார்.

இதன்படி தி.மு.க. சார்பில் இன்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தனக்குள்ள பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட அறிவுறுத்த வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு வழக்கமாக நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகள் எண் பட்டியலில் இடம் பெறாததால் திமுக தரப்பு வழக்கறிஞர், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் முறையிட்டார். அதில் அவசரம் கருதி இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு ஏற்க வேண்டுகோள் விடப்பட்டது, இதனை தலைமை நீதிபதி ஏற்றதால் வழக்கு நாளை விசாரைணக்கு வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Madras Hichcourt CJ accepts to hear case filed by Stalin to seek floor test of CM Palanisamy by tomorrow.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற