மதுரையில் ரஜினி ரசிகர்களுக்கு 200 கிலோ சிக்கன், மட்டன் விருந்து
மதுரையில் ரஜினி ரசிகர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராகவா லாரன்ஸ், திரைப்பட தயாரிப்பாளர் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினர்.
Recommended Video

மதுரை: அழகர்கோவிலில் ரஜினி ரசிகர்களுக்கு கெடா கறி, சிக்கன், முட்டை என அசைவ விருந்து அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த விருந்தில் பங்கேற்றனர்.
கடந்த மாதம் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, மதுரைன்னா வீரம், உங்களுக்கெல்லாம் கிடா வெட்டி கறி சோறு போடணும்னு ஆசை. ஆனால், இந்த மண்டபத்தில் போட வாய்ப்பில்லை, ஒருநாள் அதற்கு ஏற்பாடு செய்வேன் என்று பேசி உற்சாகப்படுத்தினார்.
இதனையடுத்து அழகர்கோவிலில் கிடா வெட்டி கறி விருந்து போட உள்ளதாக பேச்சு எழுந்தது. ஆனால் பீட்டா சார்பில் ரஜினிக்கு கடிதம் எழுதப்பட்டது. உடனே கெடா வெட்டு கிடையாது விருந்து மட்டுமே என்ற அறிவிப்பு வெளியானது.

ரஜினி ரசிகர்கள் சந்திப்பு
ரஜினி ரசிகர்கள் நேற்றைய தினம் மதுரை அழகர் கோயில் அருகே திருமண மண்டபத்தில் சந்தித்தனர். அப்போது அனைவருக்கும் ஆட்டுக்கறி விருந்தளிக்கப்பட்டது. பொதுமக்களுக்கும் விருந்து பரிமாறி அசத்தினர். கிடா வெட்டாமல் வெளியிலிருந்து கறி சமைத்து எடுத்துவந்து விருந்து வைத்தார்கள்.

200 கிலோ மட்டன்
அழகர்கோவிலில் நடந்த விருந்தில் 200 கிலோ சிக்கன், 200 கிலோ மட்டன், 1000 முட்டைகள் சமைக்கப்பட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் விருந்து பரிமாறப்பட்டது. இந்த விருந்தினை ரஜினியின் அரசியல் வருகைக்காக ரசிகர்களே ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆடு வெட்டவில்லை
ஆடு வெட்ட மாட்டோம் என்று கூறிய நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தவே அசைவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறினர் ரசிகர்கள். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தது. இந்த ரசிகர்கள் சந்திப்பில் ராகவா லாரன்ஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

கல்வி உதவித்தொகை
மன்றத்தில் தீவிரமாக பணியாற்றியவர்களுக்கு தையல் எந்திரம், வேட்டி - சேலை, சில்வர் பானைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கள், மாணவ - மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கினார். அவர் சில மணிநேரமே அமர்ந்திருந்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications