ஓபிஎஸ் டீம் ஒன்னும் முதியோர் இல்லம் அல்ல.. இங்குதான் இளைஞர்கள் அதிகம்: மாஃபா பாண்டியராஜன் பதிலடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

செங்குன்றம்: ஓபிஎஸ் அணியில்தான் இளைஞர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்றும் இது முதியோர் இல்லம் அல்ல என்றும் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்திற்கு இன்று காலை வந்த தினகரன் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களிடம் "முடிந்து போன முதியோர் இல்லமாக ஓபிஎஸ் அணி உள்ளது" என்று கூறியிருந்தார். மேலும், கே.பி. முனுசாமி இருக்கும் வரை இரு அணிகள் இணைய வாய்ப்பே இல்லை என்றும் புகழேந்தி கூறினார்.

Mafoi Pandiarajan attacks Pugazhenthi

இதுதொடர்பாக செங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மாஃபா பாண்டியராஜன், புகழேந்தியின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்தார். மேலும், ஓபிஎஸ் அணியில் இருப்பவர்கள் அனைவரும் இளைஞர்கள்தான் என்றும் உண்மை நிலையை மறைக்கவே புகழேந்தி இவ்வாறு கூறியிருக்கிறார் என்றும் பாண்டியராஜன் கூறினார்.

பழனிச்சாமி அணியில் இருப்பவர்களைவிட அதிகமாகவே ஓபிஎஸ் அணியில் இளையவர்கள் உள்ளனர் என்று புகழேந்தியின் பேச்சிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
OPS camp is not elder’s home and youth member are more than EPS team said, Mafoi Pandiarajan.
Please Wait while comments are loading...