For Daily Alerts
சென்னை பாரிமுனை எஸ்.பி.ஐ. வங்கிக் கட்டிடத்தில் தீ விபத்து
சென்னை: பாரிமுனையில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கியின் தலைமையக கட்டிடத்தில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட தீ மேலும் 2 மாடிகளுக்கு பரவியது. இந்தத் தீ விபத்தினால் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் அருகில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தீயணைப்புப் பணியில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் தீப்பிடித்தாகக் கூறப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் அருகில் உள்ள சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மின்கசிவு காரணமாக இந்தத் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தீயில் மின்சாதனப் பொருட்கள் நாசமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.