இப்படி ஆயிப் போச்சே தலைவா!
Recommended Video

சென்னை: அது என்ன நேரமோ தெரியவில்லை நடிகர் ரஜினிகாந்த்துக்கு நெருக்கமானவர்களில் பெரிய புள்ளிகள் எல்லோரும் தீவிரமான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
அது பாஜக தலைவராக இருக்கட்டும், அல்லது மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஆக இருக்கட்டும். கதை ஒன்றுதான்.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழல் வழக்கில் நேற்று அதிரடியாக அந்த நாட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டில் கைது
இந்திய ரூபாய் மதிப்பில் 1848 கோடி அளவுக்கு ஊழல் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு ஊழல் வழக்கில் அவரையும், அவர் மனைவி ரோஸ்மா மன்சூரையும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்டகாலமாக இவரது கட்சி தான் மலேசியாவில் ஆட்சி செய்து வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக நஜீப் ரசாக்கிற்கு, நேரமே சரியில்லை.

சூப்பர் ஸ்டார் நண்பர்
92 வயதில் மகாதீர் முகமது மலேசியாவின் பிரதமராகப் பதவியேற்றுள்ளார். ஆனால் இவ்வளவு காலம் கோலோச்சிய நஜீப் ரசாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இவர் வேறு யாருமல்ல தமிழகத்தை சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துக்கு மிக நெருங்கிய நண்பர் என்பது மற்றொரு சோகமாகும்.

சென்னையில் சந்திப்பு
2016ஆம் ஆண்டு கபாலி திரைப்படத்தின் ஷூட்டிங் மலேசியாவில் நடைபெற்ற போது, அப்போது பிரதமராக இருந்த நஜீப் ரசாக்கை சந்திக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் என்ன ஒரு ஆச்சரியம்.. அடுத்த ஆண்டு அதாவது 2017ல் சென்னை வந்திருந்த நஜீப் ரசாக் ரஜினிகாந்தை அவரது இல்லத்திலேயே சென்று சந்தித்து நட்பு பாராட்டினார்.
|
மலேசியாவில் சந்திப்பு
இதன் பிறகு இந்த ஆண்டு ஜனவரி மாதம் நட்சத்திர விழா மலேசியாவில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது நஜீப் ரசாக், ரஜினிகாந்த்தை சந்தித்தார். இதுகுறித்து நஜிப் ரசாக் வெளியிட்ட டுவிட்டில், தலைவர் ரஜினிகாந்த்தை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இம்முறை மலேசியாவில். இங்கு உங்களது நேரம் சிறப்பாக அமையட்டும், என்று வாழ்த்து தெரிவித்திருந்தார். இப்படி ரஜினிக்கு நெருக்கமான ஒரு நண்பர், நஜீப் ரசாக், இப்பொழுது சிறையில் அடைபட்டு உள்ளது, உள்ளபடியே ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு வேதனை தரும் செய்தி தான்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications