மயிலாடுதுறையில் 6 மாத கர்ப்பிணி அருள் ஜோதி.. எந்த தந்தையும் கேட்கக்கூடாதது.. அடுத்து நடந்த சம்பவம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த அருள்ஜோதி என்ற பெண், சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள தமிழரசன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். அருள் ஜோதி தற்போது ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரை அவர் தந்தை பார்த்த கோலத்தை தொடர்ந்து அவருக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு இடையே சண்டைகள், சச்சரவுகள், விட்டுக்கொடுத்து போகும் தன்மை இல்லாமை, வாழ்க்கை குறித்து சரியான புரிதல் இல்லாமை போன்ற பல்வேறு பிரச்சனைகள் உருவாகி வருகின்றன. பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைக்கும்ஜோடிகளிடையே பிரச்சனை ஏற்பட்டால் சமாதானம் செய்ய உறவுகள் வருகிறார்கள். நல்ல விஷயங்களை எடுத்துக்கூற ஆட்கள்வருகிறார்கள். விட்டுக்கொடுத்துசெல்வதுபற்றியும், உறவுகளிடையே புரிதல்கள் பற்றியும் பக்குவமாக பேசி புரிய வைக்க முயற்சிக்கிறார்கள்.

ஆனால் காதல் திருமணத்தை பொறுத்தவரை இருவரது வீட்டில் ஏற்றுக்கொண்டாலும், நீயாக்கத்தானேபோனாய் என்று இரு வீட்டாரும் ஒதுங்கி கொள்கிறார்கள். ஒருவேளை தம்பதிக்கு இடையே புரிதல் இல்லாமல் போனால், அது பெரிய சிக்கலாக முடிகிறது. சில நேரங்களில் நினைத்தே பார்க்க முடியாத தவறுகளை இருவருமேசெய்கிறார்கள். காதலை தேர்வு செய்த வேகத்தைவிட, திருமணம் செய்வதில் முடிவெடுத்த வேகத்தைவிட வாழ்க்கையை முடித்துக் கொள்வதில் வேகம் காட்டுகிறார்கள். மயிலாடுதுறை பெண் விஷயத்தில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புளியந்துறை கிராமத்தை சேர்ந்த 70 வயதாகும் வில்லு என்பவர் கூலி தொழிலாளியாவர். இவருடைய மகள் அருள்ஜோதிக்கு 25 வயது ஆகிறது. சென்னையில் பணிபுரிந்து வந்த அருள்ஜோதி, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பாரிவாக்கம் பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி தமிழரசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்.
6 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் அருள்ஜோதியின் சகோதரர் புகார் கொடுத்திருக்கிறார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அருள்ஜோதி இறந்த தகவல் அவருடைய தந்தை வில்லுவுக்கு தெரிவிக்கப்பட்டது. கர்ப்பிணியாக இருந்த மகள் திடீரென இறந்தது அவருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. சோகத்தில் உறைந்து போன அவர் புளியந்துறை கிராமத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று திடீரென மயங்கி விழுந்து அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே வீட்டில் தந்தை மற்றும் மகளின் உடல்கள் அருகருகே வைக்கப்பட்டிருந்ததை பார்த்து உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் அழுதனர். கர்ப்பிணி மகள் இறந்த அதிர்ச்சியில் தொழிலாளி உயிரை விட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications