For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு.. வைகோ நடைபயண நிகழ்ச்சியில் மதிமுக தொண்டர் தீக்குளிப்பு.. பதற்றம்

மதுரையில் மதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்தப்படி மேடைக்கு ஓடி வந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வைகோவின் நடைப்பயணத்தில் தொண்டர் தீக்குளித்ததால் பரபரப்பு

    மதுரை: மதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்தப்படி மேடைக்கு ஓடி வந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

    தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கான நிகழ்ச்சி மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்றது.

    இந்த நடைபயண நிகழ்ச்சியில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு நடைபயணத்தை தொடங்கி வைத்தார். இந்த நடைபயண நிகழ்ச்சி 10 நாட்கள் நடைபெறுகிறது.

    தொண்டர் தீக்குளிப்பு

    தொண்டர் தீக்குளிப்பு

    இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தொண்டர்கள் மத்தியில் மேடையில் உரையாற்றினார். அப்போது யாரும் எதிர்பாரத வகையில் தொண்டர் ஒருவர் திடீரென தீக்குளித்தார்.

    நியூட்ரினோவுக்கு எதிர்ப்பு

    நியூட்ரினோவுக்கு எதிர்ப்பு

    தீக்குளித்த தொண்டர் சிவகாசியைச் சேர்ந்த ரவி என தெரியவந்துள்ளது. நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரவி தீக்குளித்தார்.

    எரிந்தபடி ஓடி வந்தார்

    எரிந்தபடி ஓடி வந்தார்

    உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீ வைத்தபடி மேடையை நோக்கி ஓடி வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ரை சக தொண்டர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பெரும் பரபரப்பு

    பெரும் பரபரப்பு

    தீக்குளித்த அந்த தொண்டருக்கு மதுரை அப்பல்லோவில் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தால் நடைபயண நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    வைகோ கதறல்

    வைகோ கதறல்

    தொண்டர் தீக்குளித்ததை தொடர்ந்து வைகோ, இயற்கை அன்னையே அவரை காப்பாற்று என மேடையில் கண்ணீர்விட்டு கதறினார்.

    English summary
    MDMK worker taken fire bath against Theni Nutrino project.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X